Kadaisi Vivasayi Others

யார் மேல தப்பு..? சூர்யகுமாரை திட்டிக்கிட்டே போன கே.எல்.ராகுல்.. பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் 1 ரன்னில் அரைசதத்தை தவறவிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

யார் மேல தப்பு..? சூர்யகுமாரை திட்டிக்கிட்டே போன கே.எல்.ராகுல்.. பரபரப்பு வீடியோ..!

அவருக்கு செம டிமாண்ட்.. இந்த தடவை ரொம்ப பணத்தை ரெடியா வச்சிக்கோங்க.. சிஎஸ்கேவை அலெர்ட் பண்ணிய அஸ்வின்..!

2-வது ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி இன்று (09.02.2022) அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக ரோகித் சர்மாவும், ரிஷப் பந்தும் களமிறங்கினர். கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பந்தும் 18 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஏமாற்றிய டாப் ஆர்டர்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 18 ரன்களில் வெளியேற, இந்திய அணி 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி இந்திய அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது.

சரிவை மீட்ட ஜோடி

இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர். இந்த ஜோடி ஒரு அளவுக்கு செட்டாகி அதிரடியை காட்டலாம் என்று நினைத்த போதுதான் கே.எல்.ராகுல் ரன் அவுட்டானார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது.

 KL Rahul gets run-out after mixup with Suryakumar Yadav

ரன் அவுட்

போட்டியின் 30-வது ஓவரில் கே.எல்.ராகுல் அடித்த பந்தை பவுண்டரி லைனுக்கு அருகில் சென்றது. அதை தடுத்த ஹூசைன் பந்தை தூக்கி விக்கெட் கீப்பரை நோக்கி எறிந்தார். அப்போது கே.எல்.ராகுல் 2-வது ரன் ஓடும் போது திடீரென்று பாதியில் நின்று, மீண்டும் ஓடுவதற்குள் ரன் அவுட் ஆகிவிட்டார்.

முழித்த சூர்யகுமார்

இதில் தவறு கே.எல்.ராகுல் மீது இருப்பது போல தான் இருந்தது. ஆனால் தேவையில்லாமல் சூர்யகுமார் யாதவை எதோ திட்டிவிட்டு முறைத்து கொண்டே பெவிலியன் திரும்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த சூர்யகுமார் யாதவ், நம் மீது என்ன தப்பு இருக்கு என்று முழித்தார். இந்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்களை இந்தியா எடுத்தது.

கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை.. நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் நாட்டின் மலாலா பரபரப்பு கருத்து..!

KL RAHUL, RUN-OUT, SURYAKUMAR YADAV, SECOND ODI, WEST INDIES, AHMEDABAD, வெஸ்ட் இண்டீஸ், 2-வது ஒருநாள் போட்டி, விராட் கோலி, கே.எல்.ராகுல்

மற்ற செய்திகள்