"எனக்கு ஒண்ணுமே விளங்கல.." நல்லா விளையாண்டும் நோ சொன்ன இந்திய அணி.. கடுப்பான 'பிரபல' வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைத் தொடரில், இந்திய அணி அரை இறுதியில் வெளியேறியதை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
லீக் சுற்று முடிவில், முதலிடத்தை பிடித்திருந்த இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில், 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.
கடைசியில், நூலிழையில் தோனி ரன் அவுட்டானது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரால் இன்னும் எளிதில் கடந்து விட முடியாத ஒரு விஷயமாகும்.
வாய்ப்பே கிடைக்கல..
இந்த உலக கோப்பை தொடரில், இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே எல் ராகுல், சுமார் 360 ரன்கள் வரை குவித்திருந்தார். இதனையடுத்து, உலக கோப்பை தொடருக்கு அடுத்தபடியாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய கிரிக்கெட் அணி. ஆனால், இந்த தொடரில் ராகுலுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
'Universal Boss' கொடுத்த அட்வைஸ்
இந்திய அணியின் முடிவினால் விரக்தி அடைந்த ராகுல், கிறிஸ் கெயில் மூலம் எப்படி ஆறுதல் அடைந்தார் என்பது பற்றி, தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய ராகுல், "உலக கோப்பை முடித்து விட்டு, நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தோம். உலக கோப்பையில் சிறப்பாக ஆடிய பிறகும், எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது, கெயிலுக்கு நான் மெசேஜ் அனுப்பினேன். அப்போது என்னை நேரில் வந்து பார்த்த கெயில், 'ஏன் நீ ஆடவில்லை?' என என்னிடம் கேட்டார்.
உலக கோப்பையில் வாய்ப்பு கிடைத்த எனக்கு, இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் போனது, கடும் விரக்தியை ஏற்படுத்தி விட்டது. எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை என கெயிலிடம் கூறினேன். 'நீ விளையாடவில்லை என்பதற்கு 100 காரணங்கள் கூட சொல்லலாம். ஆனால், நீ ஆட வேண்டுமா இல்லையா என்பது உன் கையில் தான் உள்ளது. நீ 70 ரன்கள் அடித்தது போதவில்லை என்றால் 150 ரன் அடி. அதுவும் இல்லை என்றால், 200 ரன்கள் அடி. அப்படி தான் நீ அனைத்தையும் பார்க்க வேண்டும். ஒரு ஐபிஎல் சீசனில் 600 ரன்கள் போதவில்லை என்றால் 800 ரன்கள் அடிக்க முயல வேண்டும்.
யாருக்கும் அதிகாரம் கிடையாது
அல்லது, உலக கோப்பையில், 50, 60 ரன்கள் அடித்தது போதவில்லை என்றால், அவற்றை 100 முதல் 120 ரன்களாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அப்போது, உன்னை களமிறக்காமல் இருக்க யாரும் அதிகாரம் கிடையாது' என கெயில் எனக்கு அறிவுரை வழங்கினார்" என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு தலைமை தாங்கி வரும் கே எல் ராகுல், நேற்றைய குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் எடுத்திருந்த சில முடிவுகள் அதிகம் விமர்சனத்தினை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்