'மகளை' காதலிக்கும் இளம்வீரர்... வைரலான புகைப்படங்கள்... நடிகரின் 'பதில்' இதுதான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்களது காதலை உலகிற்கு தெரியப்படுத்தி வருகின்றனர். புத்தாண்டு நாளில் ஹர்திக் பாண்டியா தன்னுடைய நிச்சயதார்த்தம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தொடர்ந்து இளம்வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் தன்னுடைய தோழியுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு கவிதை ஒன்றையும் எழுதி இருந்தார். இந்தநிலையில் இந்திய அணியின் அதிரடி இளம்வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் புத்தாண்டில் தன்னுடைய தோழி அதியா ஷெட்டியுடன் பாரிஸ் சென்று புத்தாண்டு கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை ராகுல் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறார்.
இதற்கிடையில் ராகுல் குறித்து அதியா ஷெட்டியின் தந்தையும், பிரபல நடிகருமான சுனில் ஷெட்டி,'' நான் தொழிலை விட அதிகமாக என்னுடைய குடும்பத்தை நேசிக்கிறேன். எங்கள் குழந்தைகள் இருவரும் காதலிப்பவர்கள் எங்களுடைய குடும்பத்துக்கு பொருந்த கூடியவர்களே,'' என தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக ராகுலை, சுனில் ஷெட்டிக்கு மிகவும் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது.