'ராஜஸ்தான்' டீம வீட்டுக்கு அனுப்பியாச்சு,,.. இனிமே எந்த டீமுக்கு எல்லாம் 'பிளே' ஆஃப் 'சான்ஸ்' இருக்கு??... 'த்ரில்லிங்' கட்டத்தை எட்டிய 'ஐபிஎல்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை, பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்புகளை இழந்து வெளியேறியுள்ள நிலையில், மும்பை அணி மட்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

'ராஜஸ்தான்' டீம வீட்டுக்கு அனுப்பியாச்சு,,.. இனிமே எந்த டீமுக்கு எல்லாம் 'பிளே' ஆஃப் 'சான்ஸ்' இருக்கு??... 'த்ரில்லிங்' கட்டத்தை எட்டிய 'ஐபிஎல்'!!!

மற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடி வரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. தோல்வி பெற்றதன் காரணமாக, ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த கொல்கத்தா அணி, தற்போது 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, ராஜஸ்தான் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி கண்டிருந்தால் புள்ளிப் பட்டியலில் டெல்லி, பெங்களூர் ஆகிய அணிகளை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருக்கலாம்.

அப்படி நடந்திருக்கும் பட்சத்தில், பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நாளை நடைபெறும் போட்டியில் தோல்வி பெறும் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற நெருக்கடி ஏற்பட்டிருக்கும். ஆனால் கொல்கத்தா அணி அதை விட குறைவான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளதால் நாளைய போட்டியில் தோவலி பெறும் அணி மிக மோசமான தோல்வியை தவிர்த்தாலே கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை உள்ளது.

கொல்கத்தா அணி இனிமேல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் தோல்வி பெறும் அணி மிக மோசமான தோல்வியை சந்திக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியில் மும்பை அணி ஹைதராபாத்தை வீழ்த்த வேண்டும். ஏனெனில், இதுவரை 6 வெற்றிகள் மூலம் 12 புள்ளிகளுடன் உள்ள ஹைதராபாத் அணி அதிக ரன் ரேட் கொண்டு விளங்குகிறது. இதனால் ஹைதராபாத் அணியின் தோல்வி, கொல்கத்தா மற்றும் நாளைய போட்டியில் தோல்வி பெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வழி வகுக்கும்.

அதே வேளை, மும்பை அணியை வீழ்த்தி விட்டால் ஹைதராபாத் அணி ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விடும். அப்படி நடக்கும் நிலையில், கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றிற்கு முன்னேறும் வாய்ப்பை ரன் ரேட் விதிகத்தில் இழக்கலாம். இதனால், இறுதி லீக் போட்டி தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணி எது என்பதை தீர்மானிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளும் மிக முக்கியமான போட்டிகள் என்பதால் நிச்சயம் ரசிகர்களிடையே இந்த போட்டிகள் அதிக பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

மற்ற செய்திகள்