IPL வரலாற்றுலயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்ல.. கடைசி ஓவரில் பீஸ்ட் Mode-க்கு போன ரிங்கு சிங்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

IPL வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்க போகிற இன்னிங்க்ஸை ஆடியுள்ளார் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங்.

IPL வரலாற்றுலயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்ல.. கடைசி ஓவரில் பீஸ்ட் Mode-க்கு போன ரிங்கு சிங்...!

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது. அந்த அணியின் சாய் சுதர்ஷன் (53) மற்றும் விஜய் சங்கர் (63) ஆகியோர் சிறப்பாக ஆடி அரைசதம் கண்டனர். இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி சேஸிங்கை துவங்கியது.

துவக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் மற்றும் ஜெகதீசன் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ஆனால் அதன் பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் நிதிஷ் ராணா அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஆனால் 48 ரன்னில் ராணா வெளியேற வெங்கடேஷ் 83 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பிறகு குஜராத் கேப்டன் ரஷீத் கான் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அனைவரையும் திகைப்படைய செய்தார்.

கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் யாஷ் தயால் பந்து வீச வந்தார். முதல் பந்தில் உமேஷ் சிங்கிள் எடுக்க ரிங்கு சிங் பேட்டிங் செய்ய துவங்கினார். 5 பந்துகளுக்கு 28 ரன்கள் தேவை என்ற பிரெஷரான சூழ்நிலையில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை விளாசி புதிய சாதனையுடன் தனது அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் ரிங்கு சிங். கடைசி 5 பந்துகளில் அசாதாரணமாக ஆடி வெற்றியை வசமாக்கிய ரிங்கு சிங்கை தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

KKR, GUJARAT, IPL, RINGU SINGH

மற்ற செய்திகள்