"நீங்க இப்டி 'பண்ணுவீங்க'ன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..." 'மும்பை' அணியின் முடிவால் வருத்தத்தில் 'ரசிகர்'கள்... அப்படி என்ன நடந்துச்சு??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

13 ஆவது ஐபிஎல் சீசனின் இறுதி லீக் போட்டி மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

"நீங்க இப்டி 'பண்ணுவீங்க'ன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..." 'மும்பை' அணியின் முடிவால் வருத்தத்தில் 'ரசிகர்'கள்... அப்படி என்ன நடந்துச்சு??

தொடர்ந்து இலக்கை நோக்கி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆடி வரும் நிலையில், மும்பை அணியில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களால் கொல்கத்தா அணி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஏற்கனவே மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட்டதால் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் பவுல்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

 

 

பும்ரா, பவுல்ட் என இரு அபாயகரமான பவுலர்களை மும்பை அணி கொண்டுள்ள நிலையில், இன்றைய போட்டியில் அவர்கள் களமிறங்காதது நிச்சயம் ஹைதராபாத் அணிக்கு சாதகமாக அமையும். சற்று குறைந்த ஸ்கோரே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படி ஒருவேளை ஹைதராபாத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும். 

 

இதனால் மும்பை அணியின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த கொல்கத்தா அணியின் ரசிகர்களுக்கு பும்ரா, பவுல்ட் ஆகியோர் இடம்பெறாமல் போனது சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேட்ச் முடிவதற்கு முன்னரே பல கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

மற்ற செய்திகள்