"அப்பாடா,,.. ஜஸ்ட் 'மிஸ்'ல தப்பிச்சோம்... இப்போ தான் யா 'நிம்மதி'..." ஜாலியா இருக்கும் 'கொல்கத்தா' ரசிகர்கள்... காரணம் என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது.

"அப்பாடா,,.. ஜஸ்ட் 'மிஸ்'ல தப்பிச்சோம்... இப்போ தான் யா 'நிம்மதி'..." ஜாலியா இருக்கும் 'கொல்கத்தா' ரசிகர்கள்... காரணம் என்ன??

ஐபிஎல் போட்டிகளில் 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த ஒரு அணி எடுத்த குறைந்த பட்ச ரன்னாக இது பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்த போட்டியில் கொல்கத்தா அணி, 40 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய பெங்களூர் அணி 49 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி இருந்தது. ஐபிஎல் தொடரிலேயே ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக இது பதிவானது. 

 

அந்த போட்டிக்கு பழி வாங்கும் வகையில் பெங்களூர் அணி இன்று ஆடிய நிலையில், 49 ரன்களை விட குறைந்த ரன்னில் கொல்கத்தாவை சுருட்டி விடுமோ என கொல்கத்தா அணி ரசிகர்கள் சற்று கலக்கமடைந்தனர். ஆனால், 49 ரன்களை தாண்டியதும் கொல்கத்தா ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இது தொடர்பாக பல மீம்ஸ்களை பதிவிட்டனர். 

 

மறுபக்கம் குறைந்த ரன்களையே இலக்காக பெங்களூர் அணிக்கு கொல்கத்தா நிர்ணயித்தாலும் மிக மோசமான சாதனையில் இருந்து தப்பி விட்டோம் என கொல்கத்தா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மற்ற செய்திகள்