‘இதை என்னைக்குமே ஏத்துக்க மாட்டோம்’!.. கொல்கத்தா கோச், கேப்டன் மீது நடவடிக்கையா..? KKR CEO முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய ரசிகர்களின் ஆங்கில அறிவை கேலி செய்யும் விதமாக இயன் மோர்கன், பிரண்டன் மெக்கல்லம் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரது பழைய ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளருமான பிரண்டன் மெக்கல்லம், கடந்த 2018-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை டேக் செய்து, ‘Jos Buttler sir, you play very good opening batting’ என்று பதிவிட்டிருந்தார். அதாவது, ஆங்கிலம் சரியாக தெரியாத சில இந்திய ரசிகர்கள் இப்படி பதிவிடுவதாக கிண்டல் செய்திருந்தார்.
இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த இங்கிலாந்து அணி வீரரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான இயன் மோர்கன், ‘Sir you're my favourite batsman’ என பதிவிட்டிருந்தார். அதேபோல், ஜோஸ் பட்லர், ‘Well done on double 100 much beauty batting your on fire sir. He further tweeted, I always reply sir no.1 else like me like u’ என இந்திய ரசிகர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்து ட்வீட் செய்திருந்தனர். இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கு கருத்து தெரிவித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர், ‘இந்த விவகாரம் குறித்து முழுவதுமாக எங்களுக்கு தெரியவில்லை. எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்னும், அதுகுறித்து அனைத்து உண்மைகளையும் அறிய வேண்டும். ஆனாலும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இதுபோன்ற எந்தவொரு சம்பவத்தையும் ஏற்காது, என்றும் சகித்துக் கொள்ளாது’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து அறிமுக வீரர் ஓலே ராபின்சன், 8 வருடங்களுக்கு முன்பு பதிவிட்ட இனவெறி மற்றும் பாலியல் தொடர்பான டிவீட்கள் சர்ச்சை ஆனது. இதனால் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தற்காலிக தடை விதித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இவரை தொடர்ந்து இயன் மோர்கன், ஜாஸ் பட்லர், ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்களின் பழைய ட்வீட்டும் தற்போது பரபரப்பை கிளப்பி வருகிறது.
மற்ற செய்திகள்