“டீம் செலக்சன்ல அவரோட தலையீடும் இருக்கு”.. KKR அணியின் முக்கிய நபர் மீது குற்றம் சுமத்திய ஸ்ரேயாஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணியின் ப்ளேயிங் 11 தேர்வில் நிர்வாகத்தின் தலையீடு இருப்பதாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read | என்னங்க சொல்றீங்க? ‘செம’ ஷாக்கான ரோகித் சர்மா.. சர்ச்சையை கிளப்பிய 3rd அம்பயர் முடிவு..!
ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் தலா 43 ரன்கள் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அந்த அணியின் நிர்வாகம் மீது குற்றம் சாட்டினார். அதில், ‘கடந்த போட்டியில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பின், இப்போட்டியில் வெற்றியை பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டோம். குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் எதிரணி பவுலர்களை குறி வைத்து அடித்தார்’ என ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரரிடம் உங்களை நீக்கப் போகிறோம் என்று கூறும் நிலை ஏற்படுவது கடினமாக இருக்கிறது. பல நேரங்களில் பயிற்சியாளர் மற்றும் சிஇஓ ஆகியோர் அணி தேர்வுகளில் தலையிடுகின்றனர். ஆனாலும் அதை அனைத்து வீரர்களும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு தங்களின் சிறந்த திறமையை வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர்’ என்று கூறினார். இதன்மூலம் அணி தேர்வில் பயிற்சியாளர் மெக்கல்லம் மற்றும் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூரின் தலையீடு இருப்பதாக கேப்டன் வெங்கடேஷ் ஐயர் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்