'இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயங்க...' ஏன் இவ்வளவு தீவிரமா இருக்கீங்க...? - முன்பே கோரிக்கை வைத்து... கோபத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர்...'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் ஐபில் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயங்க...' ஏன் இவ்வளவு தீவிரமா இருக்கீங்க...? - முன்பே கோரிக்கை வைத்து... கோபத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர்...'

2021-ஆம் ஆண்டுகனா ஐபில் தொடர் கொரோனா பரவல் காலகட்டத்திலும் மிகுந்த பாதுகாப்புடன் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பதால் வீரர்களே அதிர்ச்சியில் உள்ளனர்.

இதன் காரணமாக, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் ஒரு பெரிய அறிக்கை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, 'கொரோனா வைரஸ் தற்போது விளையாட்டு வீரர்களையும் தொற்றியுள்ளது. 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் கருத்துப்படி, வீரர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஐபிஎல் (IPL) உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கேகேஆர் (KKR) வீரர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது, இது பயோ பபுளில் பாதுகாப்பின்மையை காட்டுகிறது.

அதோடு, இந்த இக்கட்டான சூழலிலும் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்த BCCI  தீவிரமாக இருப்பது ஏன்?.

இந்தியாவில் மக்கள் கொரோனா வைரஸ் அச்சம் இருந்தாலும் ஐபில் பார்த்து மகிழ்கிறார்கள் என நினைத்தேன். ஆனால் தற்போது கேகேஆர் வீரர்களுக்கு கொரோனா (Coronavirus) பாதித்துள்ளது' எனவும், ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் முன்வைத்தார். 

இந்த நிலையில், தற்போது ஐபிஎல் நிர்வாகம் இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரை காலவரையின்றி நிறுத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்