கிங் இஸ் பேக்...! அவரோட 'ஃபினிஷிங்' பார்த்த உடனே... 'சீட்ல உட்கார்ந்திருந்த நான்...' - விராட் கோலி பகிர்ந்த 'வைரல்' போஸ்ட்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் சென்னை அணியை வெற்றியின் பாதைக்கு எடுத்து சென்ற தோனியை வெகுவாக விராட் கோலி பாராட்டியுள்ளார்.

கிங் இஸ் பேக்...! அவரோட 'ஃபினிஷிங்' பார்த்த உடனே... 'சீட்ல உட்கார்ந்திருந்த நான்...' - விராட் கோலி பகிர்ந்த 'வைரல்' போஸ்ட்...!

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகள் நேற்று (10-10-2021) தொடங்கியது. முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் சிறப்பாக விளையாடி 172 ரன்கள் குவித்தது.

kholi praises Dhoni as the greatest finisher ever in cricket

சற்றே கடின இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி சிறப்பாக விளையாடியது. கடைசி 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய தோனி, 1 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் அடித்து துவம்சம் செய்து சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் சென்னை ரசிகர்கள் வார்த்தையால் சொல்ல முடியாத அளவிற்கு தோனியை கொண்டாடி வருகின்றனர்.

kholi praises Dhoni as the greatest finisher ever in cricket

இந்த நிலையில், 'கிங் இஸ் பேக்' என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

kholi praises Dhoni as the greatest finisher ever in cricket

இதுகுறித்து கோலி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கிரிக்கெட்டில் என்றும் தலைசிறந்த பினிஷர் அவர் தான். மீண்டும் ஒருமுறை என்னை துள்ளிக் குதிக்கச் செய்தார் என பதிவில் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்