"ரொம்ப ஜாலியா இருக்காதீங்க... இனி தான் உங்களுக்கு பிரச்சனையே!!..." - 'இந்திய' அணிக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் 'வீரர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக கைப்பற்றி இந்தியா திரும்பியுள்ள நிலையில், அனைத்து இந்திய வீரர்களுக்கும் உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

"ரொம்ப ஜாலியா இருக்காதீங்க... இனி தான் உங்களுக்கு பிரச்சனையே!!..." - 'இந்திய' அணிக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் 'வீரர்'!!!

முன்னதாக, ஆஸ்திரேலியா தொடருக்காக இந்திய அணி புறப்படுவதற்கு முன், ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட இந்திய அணியால் வெல்ல முடியாது என்றும், முழுக்க முழுக்க ஆஸ்திரேலிய அணி தான் ஆதிக்கம் செலுத்தும் என்றும் பல முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், அவை அனைத்தையும் பொய்யாக்கும் விதத்தில் பல முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் ஆடிய இந்திய அணி பதிலடி கொடுத்தது. ஆஸ்திரேலிய தொடர் முடித்து திரும்பியுள்ள இந்திய அணி, அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் நீண்ட தொடர் ஒன்றை இந்தியாவில் ஆடவுள்ளது.

kevin pietersen warns indian team ahead of england series

இதில் 4 டெஸ்ட் போட்டித் தொடர் முதலில் நடைபெறவுள்ள நிலையில், முதல் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் அஹமதாபாத் மைதானத்திலும் நடைபெறுகிறது. அதன்பிறகு, 5 டி 20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய அணி குறித்து கருத்து ஒன்றை ட்வீட் செய்துள்ளார்.

kevin pietersen warns indian team ahead of england series

'ஆஸ்திரேலிய அணியுடனான வெற்றியை இந்திய அணி அதிகமாக கொண்டாடி வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் உண்மையான அணி (இங்கிலாந்து) இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யப் போகிறது. அப்போது இந்திய அணியை அதன் மண்ணிலேயே இங்கிலாந்து தோற்கடிக்கும். எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை அதிகமாக கொண்டாடாமல், போட்டிகளுக்கு தயாராகுங்கள்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்