"சுத்த முட்டாள்தனம்'ங்க இது.." முக்கியமான மேட்சில் பும்ரா செய்த தவறு..? விளாசித் தள்ளிய பீட்டர்சன்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி இருந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

"சுத்த முட்டாள்தனம்'ங்க இது.." முக்கியமான மேட்சில் பும்ரா செய்த தவறு..? விளாசித் தள்ளிய பீட்டர்சன்

Also Read | மது பாட்டிலால் மகனை தாக்கிய கணவர்.. அடுத்த கணமே மனைவி செய்த பதற வைக்கும் காரியம்.. உறைந்து போன கிராமம்

முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 416 ரன்களும், இங்கிலாந்து அணி 284 ரன்களும் எடுத்திருந்தது.

அதிரடி காட்டிய இங்கிலாந்து

தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 245 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சுமார் ஒன்றரை நாட்கள் மீதமிருந்த நிலையில், எந்த அணி வெற்றி பெறும் என்ற விறுவிறுப்பு இருந்தது. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் எடுத்த இங்கிலாந்து அணி, ஐந்தாவது நாளில், 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை எட்டிப் பிடித்தது.

Kevin pietersen slams jasprit bumrah for his decision in 5 th test

இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் 2 - 2 என்ற கணக்கில் சமனாக முடிந்தது. ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோர் முறையே 142 மற்றும் 114 ரன்கள் எடுத்தனர். ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்படாததால், தோல்வியை தழுவ நேரிட்டது.

சுத்த முட்டாள்தனமான முடிவு..

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், பும்ராவின் கேப்டன்சியை விமர்சனம் செய்து பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசும் பீட்டர்சன், "பும்ராவின் வியூகங்கள் அனைத்தும் மோசமாக இருந்தது. ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளுக்கு அங்கு பலனே இல்லை. ஆனால், அதையே பும்ரா வீச செய்ததால், பேட்ஸ்மேன்கள் எளிதில் கணித்து ரன் எடுத்தார்கள். ரிவர்ஸ் ஸ்விங் பந்து 140 கி.மீ வேகத்தில் வந்தால், பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட முடியும்.

Kevin pietersen slams jasprit bumrah for his decision in 5 th test

அதே போல, ஃபீல்டிங்கிலும், பும்ரா எடுத்த முடிவுகள், சுத்த முட்டாள்தனமாக இருந்தது. தொடர்ந்து லாங் ஆன், லாங் ஆஃப் திசைகளில், ஃபீல்டர்களை பும்ரா நிற்க வைத்திருந்தார். கடைசி 15 - 20 நிமிடங்களில் கூட ஃபீல்டர்களை முன்பு வர வைத்திருந்தால், பேர்ஸ்டோவ் ரன் அடிக்க சிரமப்பட்டிருப்பார். ஆனால், அதனை பும்ரா செய்யவில்லை" என பீட்டர்சன் விமர்சனம் செய்துள்ளார்.

Also Read | "கால்சியம், வைட்டமின்'னு ஏகப்பட்ட சத்து இருக்காம்ல.." திடீரென வைரலாகும் சிவப்பு எறும்பு 'சட்னி'..

CRICKET, KEVIN PIETERSEN, JASPRIT BUMRAH, KEVIN PIETERSEN SLAMS JASPRIT BUMRAH, பும்ரா, பீட்டர்சன்

மற்ற செய்திகள்