"இப்டி எல்லாம் நடக்குறத பாத்ததும்.. மொத்தமா நான் நொறுங்கியே போயிட்டேன்.." மனமுடைந்த 'பீட்டர்சன்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா அலை மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் வரை கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

"இப்டி எல்லாம் நடக்குறத பாத்ததும்.. மொத்தமா நான் நொறுங்கியே போயிட்டேன்.." மனமுடைந்த 'பீட்டர்சன்'!!

அது மட்டுமில்லாமல், தற்போது ஐபிஎல் தொடரும் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா அணியைச் சேர்ந்த வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், முதற்கட்டமாக சில போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத், டெல்லி அணிகளைச் சேர்ந்த வீரர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஒரு பக்கம் ஐபிஎல் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு, மறுபக்கம் இந்தியாவும் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் போட்டியின் வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen) ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.

அதில், 'இந்தியா - நான் அதிகம் நேசிக்கும் ஒரு நாடு இப்படி ஒரு நிலையில் இருப்பதை பார்க்கும் போது, மனம் நொறுங்குவதைப் போல உள்ளது. நீங்கள் இதனைக் கடந்து வருவீர்கள். இதிலிருந்து இன்னும் அதிக வலிமையுடன் மீண்டு வருவீர்கள். உங்களது இரக்க குணமும், தாராள மனப்பான்மையும், இந்த நெருக்கடியின் போது கூட, கவனிக்கப்படாமல் போகாது' என மனம் வருந்தி, அதே நேரத்தில், தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

 

கிரிக்கெட் போட்டிகள் என வரும் போது, இரு நாட்டு வீரர்களிடையே மோதலும், போட்டியும் இருந்தாலும், அதனைத் தாண்டி, ஒரு பிரச்சனை என்று வரும் சமயத்தில், இப்படி கைகோர்த்து நிற்பது தொடர்பான ட்வீட், தற்போது நெட்டிசன்கள் மத்தியில், அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்