"சென்னை 'டீம்'ல ஒரு 'விஷயம்' சரியா படல... இந்த 3 'டீம்'ல ஒண்ணு தான் 'கப்' ஜெயிக்கும்..." 'Winner'-ரை கணிக்கும் 'கெவின்' பீட்டர்சன்??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

13 ஆவது ஐபிஎல் சீசன் மிக முக்கியமான கட்டத்தை தற்போது எட்டியுள்ள நிலையில், இனிவரும் போட்டிகள் அனைத்து அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டிகளாகும்.

"சென்னை 'டீம்'ல ஒரு 'விஷயம்' சரியா படல... இந்த 3 'டீம்'ல ஒண்ணு தான் 'கப்' ஜெயிக்கும்..." 'Winner'-ரை கணிக்கும் 'கெவின்' பீட்டர்சன்??

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் முறையே உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், எந்த அணிகள் இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்பது குறித்து கூறியுள்ளார். kevin pietersen names three teams who will win ipl 2020

மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய மூன்று அணிகளில் ஒன்று தான் இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் என பீட்டர்சன் கணித்துள்ளார். 'கடைசி போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வி பெற்றாலும் கூட, பெங்களூர் அணி இந்த முறை சிறந்த கிரிக்கெட்டை ஆடி வருகிறது. பெங்களூர் அணியின் ஸ்பின் காம்போ சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அடுத்து, டெல்லி அணியும் ஒரு மகத்தான அணியை கொண்டுள்ளது. kevin pietersen names three teams who will win ipl 2020

அதே போல மும்பை அணியும் வழக்கம் போல பலம் வாய்ந்த அணியாக விளங்கும் நிலையில் அவர்களின் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் மிகச்சிறந்த வரிசையை கொண்டுள்ளது. இதனால், இந்த 3 அணிகளில் ஒன்று தான் இந்த முறை கோப்பையை தட்டிச் செல்லும்' என தெரிவித்தார். kevin pietersen names three teams who will win ipl 2020

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில், 'ஹைதராபாத் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சென்னை அணி மீண்டு வந்தாலும் தொடர் வெற்றிகளை சென்னை பெறும் என்று எனக்கு தோன்றவில்லை. அவர்களின் பந்து வீச்சும் பெரிதாக இல்லை' என்றார்.

மற்ற செய்திகள்