'இத' சொல்றதுக்கு எனக்கு 'கஷ்டமா' தான் இருக்கு...! ஆனா 'நிலைமை' சரி இல்லையே...! கண்டிப்பா 'அத' பண்ணியாகணும்...! - பீட்டர்சன் கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இங்கிலாந்து சீதோஷ்ணநிலை தடையாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்குகிடையே, இங்கிலாந்து சவுத்தம்டன் பகுதியில் நடைபெற இருக்கிறது.
இந்நிலை இந்தத் தொடரின் முதல் நாள் மற்றும் இன்றைய 4-வது நாள் ஆட்டம் என இரண்டு நாட்கள் ஆட்டம் மழைக்காரணாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளன.
இப்படியே தொடர்ந்தால் போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், தனது ட்விட்டர் பக்கத்தில், 'இதை சொல்வதற்கு எனக்கு வேதனையாக இருக்கிறது. இருந்தாலும் தற்போதைய நிலையை பார்த்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை துபாயில் நடத்தப்பட வேண்டும்.
துபாய் இரு அணிகளுக்கும் பொதுவான இடம், நட்சத்திர மைதானம், உறுதியான சீதோஷ்ண நிலை, அட்டகாசமான பயிற்சி வசதிகள் என அனைத்து அம்சங்களும் இருக்கும். போட்டியையும் நல்லபடியாக முடிக்க முடியும்' எனப் பதிவிட்டுள்ளார்.
If it was up to me, Dubai would always host a one off match like this WTC game.
Neutral venue, fabulous stadium, guaranteed weather, excellent training facilities and a travel hub!
Oh, and ICC home is next to the stadium.
— Kevin Pietersen🦏 (@KP24) June 21, 2021
மற்ற செய்திகள்