RRR Others USA

இந்திய வீரரை குறிப்பிட்டு.. அடல்ட் பட நடிகை போட்ட ட்வீட்.. ரவுண்டு கட்டிய ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்திய வீரரை குறிப்பிட்டு.. அடல்ட் பட நடிகை போட்ட ட்வீட்.. ரவுண்டு கட்டிய ரசிகர்கள்

எந்த அணி வெற்றி பெறும் என்பதை தீர்மானிக்க, ஏறக்குறைய போட்டியின் கடைசி ஓவர் வரை செல்வதால், வெற்றி பெறும் அணியைத் தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கே பெரிய ஆவல் தொற்றிக் கொள்கிறது.

இந்த முறை ஐபிஎல் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புதிததாக களமிறங்கியுள்ளது.

மோதிக் கொண்ட புதிய அணிகள்

இதனால், மொத்தமுள்ள 10 அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், புதிய அணிகளான லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள், தங்களின் முதல் போட்டியில் மாறி மாறி மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது.

Kendra lust congratulates shami performance against lucknow team

CSK vs LSG மேட்ச்..

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, இரண்டு பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டி, தங்களின் அறிமுக ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம், தோல்வியுடன் தொடங்கியுள்ள லக்னோ, இன்று (31.03.2022) சென்னை அணிக்கு எதிரான போட்டியில், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக தயாராகி வருகிறது. அதே போல, சென்னை அணியும் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால், இரு அணிகளும் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்ய இன்று போராடும் என தெரிகிறது.

பாராட்டிய ஆபாச பட நடிகை

இந்நிலையில், குஜராத் அணி வீரர் ஒருவரை ஆபாச பட நடிகை பாராட்டியுள்ள சம்பவம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் வீரர் முகமது ஷமி, தொடக்க வீரர்களின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருதினையும் தட்டிச் சென்றார்.

Kendra lust congratulates shami performance against lucknow team

அவரது அபாரமான பந்து வீச்சுக்கு, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர். இதனிடையே, ஆபாச பட நடிகையான கென்ட்ரா இலஸ்ட்டும் ஷமியின் பந்து வீச்சினை பாராட்டி, ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். அதில், "முற்றிலும் அற்புதமான பெர்ஃபார்மன்ஸ்" என ஷமியைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள், பல விதமான கமெண்ட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Kendra lust congratulates shami performance against lucknow team

அது மட்டுமில்லாமல், ஷமியை வாழ்த்தியது தொடர்பான பல மீம்ஸ்களையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கென்ட்ரா இலஸ்ட் பகிர்ந்துள்ளார். மேலும், நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் கொல்கத்தா போட்டிக்கு முன்பும், அது பற்றிய ட்வீட் ஒன்றை அவர் செய்திருந்தார். இது தொடர்பான பதிவுகள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

MOHAMMADSHAMI, MOHAMMED SHAMI, KENDRA LUST, LSG VS GT, VIRAL TWEET

மற்ற செய்திகள்