"புஜாராவுக்கு தான் இப்டி ஆகணுமா?.." பரிதாபமாக போன விக்கெட்.. தென்னாப்பிரிக்க வீரரின் தரமான சம்பவம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான புஜாரா மீண்டும் ஒரு முறை வேகமாக அவுட்டாகி, விமர்சனத்தை சந்தித்து வரும் நிலையில், இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

"புஜாராவுக்கு தான் இப்டி ஆகணுமா?.." பரிதாபமாக போன விக்கெட்.. தென்னாப்பிரிக்க வீரரின் தரமான சம்பவம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முன்னதாக, இதுவரை நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.

தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளும்  மிகத் தீவிரமாக ஆடி வருகிறது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 223 ரன்கள் எடுத்திருந்தது.

வெற்றி இலக்கு

அதன் பிறகு, தங்களின் முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி, 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் காரணமாக, தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 212 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மோசமான பேட்டிங்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், அதிரடியாக ஆடி ரன் குவித்தார். இறுதி வரை, களத்தில் நின்ற அவர், சதமடித்து அசத்தியிருந்தார். தொடக்கத்தில், இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. வழக்கம் போல புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர், மீண்டும் சொதப்பி, ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இந்த தொடரில், ஒரே ஒரு இன்னிங்ஸில் தான், இருவரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.

கேள்விக்குறி ஆன வாய்ப்பு

மற்றபடி, எந்த விதத்திலும் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், இனி வரும் டெஸ்ட் தொடர்களில், அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இதனிடையே, இந்த போட்டியில், புஜாரா அவுட் ஆன விதம் தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மிரள வைத்த கேட்ச்

இன்றைய நாளின் ஆட்டம் தொடங்கியதும் முதல் ஓவரை மார்கோ ஜென்சன் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை, புஜாரா எதிர்கொண்டார். அப்போது, ஷார்ட் பாலாக வந்ததை சந்தித்த புஜாரா, பேட்டை லேசாக காண்பித்தார். பேட்டில் பட்ட பந்து, நேராக ஸ்லிப் பக்கம் சென்றது. பந்து வேகமாக, பவுண்டரியை நோக்கிச் சென்று விடும் என அனைவரும் கருதிய நிலையில், அங்கு ஃபீல்டிங் நின்ற இளம் வீரர் கீகன் பீட்டர்சன், மிக அற்புதமாக தாவிப் பிடித்து, அதனை விக்கெட்டாக மாற்றினார்.

கடும் விமர்சனம்

இதனைக் கண்ட வர்ணனையாளர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள், ஒரு நிமிடம் திகைத்து போனார்கள். அந்த அளவுக்கு சிறப்பாக, பீட்டர்சன் ஃபீல்டிங் செய்திருந்தார்.

மீண்டும் ஒரு முறை, புஜாரா தனது விக்கெட்டை பறிகொடுத்து, அதிகம் விமர்சனத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

PUJARA, KEEGAN PETERSEN, IND VS SA, RAHANE, RISHABH PANT, பீட்டர்சன், புஜாரா

மற்ற செய்திகள்