"அந்த மனசு தான்யா கடவுள்.." 'சிஎஸ்கே' வெற்றி பெற்றதும்.. மைதானத்தில் 'கேதார் ஜாதவ்' செய்த 'காரியம்'.. 'வைரலாகும்' வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனில், பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பிடித்து, தொடரில் இருந்து வெளியேறியிருந்தது.

"அந்த மனசு தான்யா கடவுள்.." 'சிஎஸ்கே' வெற்றி பெற்றதும்.. மைதானத்தில் 'கேதார் ஜாதவ்' செய்த 'காரியம்'.. 'வைரலாகும்' வீடியோ!!

அந்த அணியிலுள்ள வீரர்கள் சிலரின் ஆட்டம் கடுமையான விமர்சனத்தை சந்தித்திருந்தது. அதிலும் குறிப்பாக, இந்திய பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ் (Kedar Jadhav), ஒரு போட்டியில் கூட சிறப்பாக ஆடவில்லை. இருந்த போதும், சிஎஸ்கே கேப்டன் தோனி, தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு முன்பான ஏலத்தில், கேதார் ஜாதவை சென்னை அணி விடுவித்திருந்தது. அதன் பிறகு, ஜாதவை ஹைராபாத் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. இந்நிலையில், இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய நிலையில், சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 171 ரன்கள் எடுத்தது. இதில், கடைசி ஓவர்களில் போது களமிறங்கிய கேதார் ஜாதவ், தனக்கு கிடைத்த 4 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்தார். கடந்த சீசனில், சென்னை அணிக்காக ஒரு சிக்ஸரை கூட அடிக்காத கேதார் ஜாதவ், சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார். சென்னை அணிக்காக சிறப்பாக ஆடாமல், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சிக்ஸர் அடித்த கேதார் ஜாதவ் தொடர்பாக அதிக மீம்ஸ்கள் மற்றும் பதிவுகள் வைரலானது.

இந்நிலையில், இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபிளஸ்ஸி ஆகியோர் சிறப்பாக ஆடி, அரை சதமடித்தனர். இறுதியில், சென்னை அணி எந்தவித நெருக்கடியும் இன்றி, 19 ஆவது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தது. சென்னை அணி வெற்றி பெற்ற பிறகு, மைதானத்தில் கேதார் ஜாதவ் செய்த செயல், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தனது அணி தோல்வியடைந்த பிறகும், போட்டி என்பதைத் தாண்டி, குடும்பம் போல பழகிய அணியின் வெற்றியை, களத்தில் இருந்த சிஎஸ்கே வீரர் ரெய்னாவுடன், மிகவும் ஆனந்தமாக கேதார் ஜாதவ் கொண்டாடினார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது. அதே போல, போட்டிக்கு பிறகு, சிஎஸ்கே கேப்டன் தோனியுடன் கேதார் ஜாதவ் உரையாடிய புகைப்படங்களும் அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

மற்ற செய்திகள்