'உலககோப்பையில 'கேதர் ஜாதவ்' விளையாடுவாரா'?... 'இரண்டு பேருல' யாருக்கு 'ஜாக்பாட்' அடிக்கும்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே இந்திய கேப்டன் கோலி.வீரர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கினார்.அதில் வீரர்கள் உலகக்கோப்பை போட்டிகளை மனதில் வைத்துக்கொண்டு,ஐபிஎல் போட்டிகளில் மிகுந்த கவனத்துடன் விளையட வேண்டும்,என தெரிவித்திருந்தார்.இந்நிலையில் சென்னை அணி வீரரும், உலகக்கோப்பைகான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் கேதர் ஜாதவ், காயமடைந்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

'உலககோப்பையில 'கேதர் ஜாதவ்' விளையாடுவாரா'?... 'இரண்டு பேருல' யாருக்கு 'ஜாக்பாட்' அடிக்கும்?

மொஹாலியில் நேற்று நடைபெற்ற போட்டியில் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சி.எஸ்.கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து,வெற்றி இலக்கை எட்டியது.இதனிடையே போட்டியின் 14வது ஓவரில் "ஓவர் த்ரோ" பந்தை பிடிக்க முயற்சி செய்தபோது,கீழே விழுந்த கேதர் ஜாதவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறிய அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் 'கேதர் ஜாதவ் இனி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கமாட்டார்' என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். இதனிடையே இந்த மாத இறுதியில் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில்,கேதருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் அவர் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா,என்ற கேள்வியினை எழுப்பியுள்ளது.நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளிலும் கேதர் ஜாதவ் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.14 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாதவ்,162 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.தற்போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயமும் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விமர்சகர்கள் ''கேதர் ஜாதவிற்கு ஏற்பட்டிருக்கும் காயத்தின் தன்மை குறித்தே பிசிசிஐ தனது இறுதி கட்ட முடிவை எடுக்கும்.அவ்வாறு அவரின் காயம் குணமாகாத பட்சத்தில்,ஏற்கனவே ரிசர்வ் பட்டியலில் இருக்கும் அம்பத்தி ராயுடு அல்ல ரிஷப் பன்ட் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.அதிலும் அம்பத்தி ராயுடுவிற்கு அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஏற்கனவே வீரர்கள் தேர்வின் போது தனக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் கடுப்பான ராயுடு,ட்விட்டரில் பிசிசிஐயை பலமாக கலாய்த்திருந்தார்.அதனை பிசிசிஐ கண்டுகொள்ளாத பட்சத்தில் நிச்சயம் அம்பத்தி ராயுடு அணியில் இடம் பிடிப்பது உறுதி'' என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.