கிரிக்கெட்டில் புதிய அவதாரம் எடுத்த முன்னாள் CSK வீரர்.. வெளியான அசத்தல் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
Also Read | “என்னோட ஆசை இதுதான்”.. மலை மீது வருங்கால கணவரை கொல்ல முயன்ற ‘இளம்பெண்’ சொன்ன பரபரப்பு வாக்குமூலம்..!
கேதார் ஜாதவ், கடந்த 2014-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். முதலில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அடுத்த ஆண்டே டி20 போட்டிகளிலும் விளையாடத் தொடங்கினார். அதே காலகட்டங்களில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார். இதனை அடுத்து 2016-2017 காலகட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடினார்.
இதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடினார். அந்த ஆண்டு மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கிய அவர் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெறச் செய்தார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டுகளில் மோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் அதிக ரன்கள் அடிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அப்போது களத்தில் இருந்து கேதர் ஜாதவ் சிங்கிள் எடுத்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார். அதனால் இவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணி அவரை விடுவித்தது. இதன்பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சென்றார். அங்கும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை.
இந்த நிலையில் கேதர் ஜாதவ் புதியதாக கிரிகெட் அகடமி ஒன்றை துவக்கியுள்ளார். தனது சொந்த ஊரான புனே நகரில் பிரபல தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் புனித் பாலனுடன் இணைந்து இந்த அகடாமியை தொடங்கியுள்ளார். இதற்கு ‘புனித் பாலன்-கேதார் ஜாதவ் கிரிக்கெட் அகெடமி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Happy to announce the launch of Punit Balan - Kedar Jadhav cricket academy today 🤗 we will create a positive environment and top notch facilities for players to fulfill their Dreams 🇮🇳 providing them opportunities in different format s of the game for Mens and Womens 🏏 pic.twitter.com/q5nwRkSc5K
— IamKedar (@JadhavKedar) April 20, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்