VIDEO: ‘யாருப்பா இந்த இளம் புயல்’... ‘29 பந்துகளில், 10 விக்கெட்டுகளை’... ‘ஒரே ஆளாக வீழ்த்தி’... ‘திரும்பி பார்க்க வைத்த கேப்டன்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

50 ஓவர் கிரிக்கெட் தொடரில் சண்டிகர் வீராங்கனை ஒருவர், வெறும் 29 பந்துகளில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைப் படைத்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

VIDEO: ‘யாருப்பா இந்த இளம் புயல்’... ‘29 பந்துகளில், 10 விக்கெட்டுகளை’... ‘ஒரே ஆளாக வீழ்த்தி’... ‘திரும்பி பார்க்க வைத்த கேப்டன்’!

பெண்களுக்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சண்டிகர் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள், ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பாவில் உள்ள கே.எஸ்.ஆர்.எம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த சண்டிகர் அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது. பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அருணாச்சல பிரதேசம் அணி களம் இறங்கியது.

சண்டிகர் அணியின் கேப்டனான காஷ்வீ  கவுதம் வீசிய 29 பந்துகளில், ஆறு டாட் பந்துகள் போக மீதமுள்ள 23 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளையும் ஒரே ஆளாக வீழ்த்தி சாதனை படைத்தார். காஷ்வீ கவுதமின் அபாரமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அருணாச்சல பிரதேச அணி 25 ரன்னில் சுருண்டது. அருணாச்சல பிரதேசம் அணி 9 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்தது. 8 வீராங்கனைகள் டக் அவுட் ஆனார்கள். அதில் நான்கு பேர் முதல் பந்திலேயே வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

CRICKET, BCCI, KASHVEE GAUTAM