RRR Others USA

"பையன வேலைக்காரன் மாதிரி நடத்துனாங்க.." இந்திய வீரருக்கு நேர்ந்த துயரம்??.. பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் சீசன், கடந்த 26 ஆம் தேதி ஆரம்பித்து, மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

"பையன வேலைக்காரன் மாதிரி நடத்துனாங்க.." இந்திய வீரருக்கு நேர்ந்த துயரம்??.. பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

‘அண்ணன் வீசிய ஓவரில் தம்பி அவுட்’.. எப்பவும் ஆக்ரோஷமா கொண்டாடும் க்ருணால்.. இப்போ என்ன பண்ணார் தெரியுமா?

இதுவரை நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று நடைபெறவுள்ள ஐந்தாவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன.

முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அசத்தல் வெற்றியை பெற்றிருந்தது.

ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ்

இந்த போட்டியில், டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ரோஹித் ஷர்மா, அன்மோல் ப்ரீத் சிங், பொல்லார்ட் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதினை தட்டிச் சென்றார். கடந்த இரண்டு சீசன்களில், கொல்கத்தா அணிக்காக ஆடி வந்த குல்தீப் யாதவிற்கு, மிக குறைவான போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

kapil pandey slams kkr for treat kuldeep yadav as servant

ஏலத்தில் எடுத்த டெல்லி அணி

இதனிடையே, இந்திய அணியிலும் குல்தீப் யாதவிற்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. சமீபத்தில் மட்டும் ஒரே ஒரு தொடரில் அவர் இந்திய அணிக்காக ஆடி இருந்தார். இதனையடுத்து, இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில், டெல்லி அணி அவரை 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

வேலைக்காரன் மாதிரி நடத்தி இருப்பாங்க..

இதனைத் தொடர்ந்து, தற்போது அவர் களமிறங்கியுள்ள முதல் போட்டியிலேயே முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருதினையும் தட்டிச் சென்று, தன்னுடைய திறனை நிரூபித்துக் காட்டியுள்ளார். இந்நிலையில், குல்தீப் யாதவின் பயிற்சியாளர் கபில் பாண்டே, சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

kapil pandey slams kkr for treat kuldeep yadav as servant

"குல்தீப் யாதவ் நன்றாக தான் செயல்பட்டு வந்தார். ஆனால், அவருக்கான வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டு வந்தது. கொல்கத்தா அணி அவரை விடுவித்ததும், குல்தீப் உட்பட நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். அந்த அணியில், ஒரு வேலைக்காரன் போல தான் குல்தீப் நடத்தப்பட்டார் என நாங்கள் உணர்ந்தோம். அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், கொல்கத்தா அணி விடுவித்தால் போதும் என்று தான் இருந்தது.

உயர்ந்த குறிக்கோளா இருக்கணும்

9 முதல் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய குல்தீப், இரண்டு கோடி ரூபாய்க்கு தான் ஏலம் போனார். கொல்கத்தா அணி காரணமாக, பொருளாதார ரீதியாகவும் குல்தீப் பாதிக்கப்பட்டுள்ளார். குறைவான தொகைக்கு ஏலம் போவது, தவறான ஒன்று கிடையாது. நீ விளையாடிக் கொண்டே இரு. கடினமாக உழைத்தால் போதும். பணம் சம்பாதிப்பதை விட, நாட்டுக்காக ஆடுவதே உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும் என குல்தீப்பிடம் அறிவுறுத்தினேன்.

kapil pandey slams kkr for treat kuldeep yadav as servant

வாட்டி எடுத்த ஒரு விஷயம்

குல்தீப் என்னிடம், 'என்ன பிரச்சனை என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. கொல்கத்தா அணியின் திட்டம் என்ன என்பதும் எனக்கு விளங்கவில்லை' என ஒருமுறை குறிப்பிட்டார். உண்மையில், கேப்டனும் அணி நிர்வாகமும் குல்தீப் மீதான நம்பிக்கையை இழந்து விட்டது. அந்த மனச் சோர்வு, குல்தீப்பை அதிகம் வாட்டி எடுத்தது" என கபில் பாண்டே தெரிவித்துள்ளார்.

இளம் வீரரான குல்தீப் யாதவ், இரண்டு ஆண்டுகள் கொல்கத்தா அணியில் ஆடியது பற்றி, அவரின் பயிற்சியாளர் தெரிவித்துள்ள கருத்து, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"இதுக்கு பேரு கேப்டன்சியா??.." இரண்டே ஓவரில் மாறிய மேட்ச்.. ராகுல் முடிவால் கடுப்பான ரசிகர்கள்..

CRICKET, KAPIL PANDEY, KOLKATA KNIGHT RIDERS, KKR, KULDEEP YADAV, SERVANT, IPL2022

மற்ற செய்திகள்