‘களத்துக்கு வெளிய முரண் இருக்கலாம், ஆனா...’ கோலி, ரோஹித் மோதல் சர்ச்சை..! கருத்து கூறிய முன்னாள் கேப்டன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி, ரோஹித் ஷர்மா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியான சர்ச்சை குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

‘களத்துக்கு வெளிய முரண் இருக்கலாம், ஆனா...’ கோலி, ரோஹித் மோதல் சர்ச்சை..! கருத்து கூறிய முன்னாள் கேப்டன்..!

நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது. லீக் சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, அரையிறுதியில் சொதப்பியது ரசிகர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இடையே பிரச்சனை உருவனதாக சர்ச்சை கிளம்பியது.

மேலும் உலகக்கோப்பை தொடரின் போது அனுமதி இல்லாமல் 15 நாட்களுக்கும் மேலாக ரோஹித் ஷர்மா தனது மனைவை உடன் தங்க வைத்தாகவும், இது தொடர்பாக கோலி விசாரித்தால் இருவருக்கும் இடையே சண்டை வந்ததாக தகவல் வெளியானது. தற்போது ரோஹித் இல்லாமல் விராட் கோலி மற்ற வீரர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டது மேலும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், ‘களத்துக்கு வெளியே இருவருக்கும் கருத்து முரண்பாடு இருக்கலாம். ஆனால் அணிக்காக விளையாடும்போது இருவரது சிந்தனையும் அணி வெற்றி குறித்தே இருக்க வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

VIRATKOHLI, KAPIL DEV, ROHITSHARMA, RIFT, TEAMINDIA, INDVWI