'பேசாம அவரு என்கூட கால்ஃப் விளையாட வந்துடலாம்...' 'அதான் டீம்ல இஷான் கிஷன் வந்துட்டாருல...' 'இனிமேல் உள்ள வர்றது ரொம்ப கஷ்டம் தான்...' - கபில்தேவ் கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ் தற்போது, புரொபஷனல் கால்ஃப் டூர் ஆஃப் இந்தியாவின் வாரிய உறுப்பினராக கபில் தேவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் இன்சைடு ஸ்போர்ட் ஊடகத்துக்கு அவர் கூறும்போது, 'நான் தற்போது கால்ஃப் சங்க உறுப்பினராக சேர்ந்துள்ளேன், கிரிக்கெட் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. இங்கு என்னுடைய பணி என்னவென்று இதுவரை தெரியாது.
அதேபோல் பிசிசிஐ-யில் என் பங்கு என்னவென்றும் எனக்குத் தெரியாது. எப்போது பிசிசிஐ எங்களை அழைத்தாலும் நாங்கள் தயாராக இருப்போம். இதை ஒரு ஜோக்காக மட்டுமே கூறுகிறேன்' என்றார் கபில்தேவ்.
அதுமட்டுமில்லாமல், 'இனி ஷிகர் தவானைப் பொறுத்தவரையில் கேரியர் முடிந்து விட்டது என்றே கூறலாம். அவரை நான் என்னுடன் கால்ஃப் விளையாட வா என்று கூறுவேன்.
இங்கிலாந்துக்கு எதிராக மார்க் உட், ஜோப்ரா ஆர்ச்சர் பந்துகள் ஏதும் அவரின் கண்ணுக்கு தெரியவில்லை. வெறும் தெரிந்த 12 பந்துகளில் 4 ரன்கள்தான் எடுத்தார். தற்போது அவருக்கு பதிலாக இறக்கப்பட்ட இஷான் கிஷன் தன் வாய்ப்பை இறுகப் பற்றி கொண்டார்.
ஷிகர் தவான் இந்திய அணிக்காக பிரமாதமான பங்களிப்புகளை செய்ததோடு 2015 உலகக்கோப்பை 2019 உலகக்கோப்பையிலும் அர்ப்பணிப்புடன் ஆடியுள்ளார்.
ஆனால் தற்போது, இந்திய அணியில் ஷிகர் தவானின் இடம் கேள்விக்குறிதான். டெஸ்ட்டிலும் இனி அவர் உள்ளே வருவது கடினம். ஒருநாள் போட்டிகளிலும் கூட கஷ்டம் தான், இனி அவருக்கு என்ன இருக்கிறது, என்னுடன் கால்ஃப் விளையாடலாம்' என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதும் 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வென்று ஒரு அடி முன்னேறினால் தொடரை வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் குறிப்பிடுள்ளார்.
மற்ற செய்திகள்