‘சந்தேகத்துக்குரிய வகையில் விளையாடியதாக’.. ‘பிரபல கேப்டனுக்கு தடை விதிக்க ஐசிசி முடிவு..?’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்ஸன் சந்தேகத்துக்குரிய வகையில் பந்துவீசியதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘சந்தேகத்துக்குரிய வகையில் விளையாடியதாக’.. ‘பிரபல கேப்டனுக்கு தடை விதிக்க ஐசிசி முடிவு..?’

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள நியூசிலாந்து அணி அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தப் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீசிய விதம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

சர்வதேச போட்டிகளில் அரிதாக பந்துவீசும் கேன் வில்லியம்ஸன் இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் 3 ஓவர்கள் மட்டுமே வில்லியம்ஸன் பந்து வீசியுள்ளார்.

இந்நிலையில் இந்தப் போட்டியில் வில்லியம்ஸன் பந்துவீச்சில் விதிமீறல் இருந்ததாக நடுவர்கள் ஐசிசியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகார் உண்மையென நிரூபணமானால் வில்லியம்ஸனுக்கு பந்துவீச தடை அல்லது பந்துவீச்சு தொடர்பாக சோதனை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இந்தப் போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் தனஞ்சயா மீதும் இதே புகார் எழுந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

SRILANKA, NEWZEALAND, KANEWILLIAMSON, BOWLING, BAN, ICC