மனைவிக்கு பிரசவம்.. உடனே நாடு திரும்பும் கேன் வில்லியம்சன்.. அப்போ SRH அணிக்கு அடுத்த கேப்டன் இவர் தானா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Also Read | “ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க”.. ரசிகர் உருக்கமாக எழுதிய கடிதம்.. ஆட்டோஃகிராப் போட்டு பாராட்டிய தோனி..!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு எந்த அணி கோப்பையை வெல்ல உள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதில் சென்னை, மும்பை ஆகிய அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளன.
இந்த சூழலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நடப்பு ஐபிஎல் தொடரின் இனி வரும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேன் வில்லியம்சன்-சாரா ரஹீம் தம்பதிக்கு 2-வது குழந்தை பிறக்கவுள்ளது. மனைவியின் பிரசவத்தின் போது தான் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக கேன் வில்லியம்சன் நாடு திரும்ப உள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில், தற்போது 2-வது குழந்தை பிறக்கவுள்ளது.
நடப்பு சீசனில் கேப்டனாக கேன் வில்லியம்சன் சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆனால் பேட்ஸ்மேனாக சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 216 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரே ஒரு அரைசத்தை மட்டுமே கேன் வில்லியம்சன் அடித்துள்ளார். இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 6-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இனி வரும் போட்டிகளில் நிகோலஸ் பூரன் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் வீரரான இவர், அந்த நாட்டு டி20 கிரிக்கெட் அணியை கேப்டனாக வழி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்