“டீம் மாறுனாலும், அந்த பாசம் மட்டும் இன்னும் மாறல”.. கேன் வில்லியம்சன் செய்த செயல்.. பாராட்டும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சதத்தை தவறவிட்ட டேவிட் வார்னருக்கு ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆறுதல் தெரிவித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

“டீம் மாறுனாலும், அந்த பாசம் மட்டும் இன்னும் மாறல”.. கேன் வில்லியம்சன் செய்த செயல்.. பாராட்டும் ரசிகர்கள்..!

Also Read | “நான் சிங்கிள் அடிக்கவான்னு கேட்டேன், ஆனா..!” சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் வார்னர் சொன்ன வார்த்தை..!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 50-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் டெல்லி அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 92 ரன்கள் குவித்து அசத்தினார். 20 ஓவரில் சதம் அடிக்க வாய்ப்பிருந்தும் அணிக்காக வார்னர் அதை தவிர்த்தார். அப்போது பேட்டிங் செய்த ரோவ்மேன் பவல் அந்த ஓவரில் 19 ரன்கள் விளாசினார்.

இதனை அடுத்து முதல் இன்னிங்ஸ் முடிந்து களத்தை விட்டு வெளியேறும் போது ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் டேவிட் வார்னருக்கு பாராட்டு தெரிவித்து அவரது முதுகில் தட்டிக் கொடுத்தார். அவரை தொடர்ந்து ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் வார்னருக்கு பாராட்டு தெரிவித்தார்.

கடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் விளையாடினார். ஆனால் அவர் தலைமையிலான ஹைதராபாத் அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. அதனால் தொடரின் பாதியிலேயே கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அணியில் இருந்தும் வார்னர் ஓரம் கட்டப்பட்டார். மேலும் அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனை அடுத்து நடந்த ஐபிஎல் ஏலத்தில் டெல்லி  அணி அவரை எடுத்தது.

இந்த சூழலில் டேவிட் வார்னர் வேறு அணிக்கு சென்றாலும், அவர் சிறப்பாக விளையாடியதை கேன் வில்லியம்சன் மற்றும் புவனேஷ்வர் குமார் பாராட்டியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

CRICKET, KANE WILLIAMSON, BHUVNESHWAR KUMAR, DAVID WARNER, SRH, SRH VS DC, IPL 2022

மற்ற செய்திகள்