'நான் தப்பு பண்ணிட்டேன்...' 'ப்ளீஸ்... என்ன மன்னிச்சிடுங்க...' 'சீன மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஜான் ஸீனா...' - அப்படி என்ன தான் பண்ணார்...?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

WWE சூப்பர் ஸ்டார் ஜான் ஸீனா சீன நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'நான் தப்பு பண்ணிட்டேன்...' 'ப்ளீஸ்... என்ன மன்னிச்சிடுங்க...' 'சீன மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஜான் ஸீனா...' - அப்படி என்ன தான் பண்ணார்...?

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய ஜான் ஸீனா, இந்த படத்தைக் காணும் முதல் நாடுகளில் ஒன்றாகத் தைவான் இருக்கும் என்று பேசியிருந்தார்.

John Cena apologized to china calling Taiwan a country

தைவானை நீண்டகாலமாக சீனா, தனது நாட்டின் பரப்பாக உரிமை கோரி வருகிறது. தைவான் தங்களை தனி நாடாக சொன்னாலும், தைவானை எப்போது கைப்பற்ற போகிறோம் என துடித்துக் கொண்டிருக்கும் சீனாவுக்கு இந்த தைவான் நாடு என்று சொல் கடுப்பை கிளப்பியுள்ளது.

John Cena apologized to china calling Taiwan a country

அதோடு சீன மக்கள் மற்றும் சீன அரசு ஜான் ஸீனாவிற்கு கடும் எதிர்ப்பையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

John Cena apologized to china calling Taiwan a country

இதனால் பதற்றமும் சோகமுமடைந்த நடிகர் ஜான் ஸீனா தனது தவறுக்கு மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மாண்டரின் மொழியில் பேசியிருக்கும் ஸீனா, 'நான் 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' திரைப்படத்துக்காகப் பல பேட்டிகள் கொடுத்தேன். அதில் ஒரு பேட்டியில் தவறு செய்துவிட்டேன்.

John Cena apologized to china calling Taiwan a country

நான் சீனாவையும், சீனத்து மக்களையும் மதிக்கிறேன், நேசிக்கிறேன். எனது தவறுக்கு நான் மிக மிக அதிகமாக வருந்துகிறேன். மன்னிப்பு கேட்கிறேன்' எனக் கூறியுள்ளார் ஜான் ஸீனா.

John Cena apologized to china calling Taiwan a country

ஜான் ஸீனாவின் இந்த வீடியோவெல்லம் போதாது, தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று பேசி காணொலி வெளியிட வேண்டும் என்று சிலர் அளவுக்கு மீறி அலப்பறை செய்து வருகின்றனர்.

சீனாவில் வெளியான 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' திரைப்படம் கடந்த வார இறுதியில், 148 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்