'இலங்கை' வீரர்களுடனான ஹேண்ட் ஷேக் ... நோ சொன்ன 'இங்கிலாந்து' கேப்டன் ... 'ஜோ ரூட்டின்' அதிரடி முடிவு !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியின் போது இலங்கை வீரர்களுடன் கை குலுக்கப் போவதில்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

'இலங்கை' வீரர்களுடனான ஹேண்ட் ஷேக் ... நோ சொன்ன 'இங்கிலாந்து' கேப்டன் ... 'ஜோ ரூட்டின்' அதிரடி முடிவு !

உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் இலங்கை நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி ஆடவுள்ளது. இப்போட்டியின் போது இலங்கை வீரர்களுடன் தொடாமல் ஒருவரையொருவர் பாராட்டவுள்ளதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜோ ரூட் மேலும் கூறுகையில், 'தென்னாப்பிரிக்க பயணத்தின் போது இங்கிலாந்து அணி வீரர்களுக்கு காய்ச்சலும், உணவுப் பிரச்சனைகளும் ஏற்பட்டது. இதனால் இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது எங்களது மருத்துவக் குழுவின் அறிவுரைப் படி இலங்கை அணி வீரர்களுடன் கை குலுக்கி பாராட்டுவது உட்பட உடல் ரீதியாக தொடர்பு வேண்டாம் என முடிவு செய்துள்ளோம்' என தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 19 - ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

JOE ROOT, ENG VS SL, TEST CRICKET, CORONA VIRUS