"கொஞ்ச 'நேரம்' தாங்க அவரு கூட பேசியிருப்பேன்... அதுக்கப்புறம் என் 'பேட்டிங்' லெவலே வேற..." 'இந்திய' வீரரை புகழ்ந்து தள்ளிய வெஸ்ட் இண்டீஸ் 'வீரர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்தவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெர்மைன் பிளாக்வுட்.

"கொஞ்ச 'நேரம்' தாங்க அவரு கூட பேசியிருப்பேன்... அதுக்கப்புறம் என் 'பேட்டிங்' லெவலே வேற..." 'இந்திய' வீரரை புகழ்ந்து தள்ளிய வெஸ்ட் இண்டீஸ் 'வீரர்'!!!

ஆனாலும், அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்து நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலியை பாராட்டி ஜெர்மைன் பிளாக்வுட் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

'நான் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் அதிகமாக உரையாடியதில்லை. இந்திய கேப்டன் விராட் கோலியுடன் சமூக வலைத்தளம் மூலமாக சில நேரம் பேசியுள்ளேன். அதன்பிறகு, வெஸ்ட் இண்டீஸிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது கோலியை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் டெஸ்ட் போட்டியில் எப்படி சதமடிப்பது என்பது குறித்து உரையாடினேன். 'அதிக பந்துகளை டெஸ்ட் போட்டியில் எதிர்கொண்டாலே ஒரு பக்கம் ரன்களை நீங்கள் குவித்துக் கொண்டிருக்க முடியும்' என கோலி குறிப்பிட்டார்.

மிக குறைந்த நேரமே கோலியுடனான எனது உரையாடல் நிகழ்ந்தது. ஆனால், அது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் பலன் கொடுத்தது. அதன்பிறகு, கோலியின் அறிவுரையை மனதில் வைத்துத் தான் நான் ஆடி வருகிறேன்' என ஜெர்மைன் பிளாக்வுட் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்