Content Warning : ஃபீல்டிங்கில் நடந்த விபத்து... ரசிகர்களை பதற வைத்த சம்பவம்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. முதலில் நடந்த டி 20 போட்டியை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

Content Warning : ஃபீல்டிங்கில் நடந்த விபத்து... ரசிகர்களை பதற வைத்த சம்பவம்.. வீடியோ..!

Also Read | Nepal Plane Crash : விமான விபத்தில் 72 பேர் பலி.. பயணி எடுத்த லைவ் வீடியோவில் பதிவான திக் திக் நிமிடங்கள்!

இதற்கடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடந்தது. இதில், முதல் 2 போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது ஒரு நாள் போட்டி, நேற்று (15.01.2023) நடைபெற்றிருந்தது. மற்ற இரண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தது போல, இந்த போட்டியிலும் இந்திய அணியின் கை ஓங்கியே இருந்தது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே  அதிரடியாக ஆடி ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். முதல் ஒரு நாள் போட்டியில் சதமடித்திருந்த நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் சதமடித்தார் கோலி.

Jeffrey Vandersay and Ashen Bandara collide while fielding

அது மட்டுமில்லாமல், 150 ரன்களைக் கடந்த கோலி, 166 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். 110 பந்துகளில், 13 ஃபோர்கள் மற்றும் 8 சிக்ஸர்களை கோலி விளாசினார். 50 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 390 ரன்கள் எடுத்திருந்ததது இந்திய அணி.

தொடர்ந்து இமாலய இலக்கை சேசிங் செய்த இலங்கை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆரம்பத்தில் இந்திய பந்து வீச்சாளர் சிராஜ் விக்கெட்டுகளை சாய்க்க, இதன் பின்னர் 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி, 73 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Jeffrey Vandersay and Ashen Bandara collide while fielding

இந்தப் போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்யும்போது சமிகா கருணரத்னே 43 வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் விராட் பவுண்டரிக்கு பந்தை விளாசினார். அதனை தடுக்க இலங்கை அணியின் வாண்டர்சே மற்றும் பண்டாரா முயற்சித்தனர். அப்போது, வேகமாக ஓடிவந்த இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதனால் இருவருமே காயமடைந்து வலியில் துடித்தனர். இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளின் பிசியோக்களும் களத்திற்குள் ஓடினர்.

Jeffrey Vandersay and Ashen Bandara collide while fielding

வலியால் துடித்துக் கொண்டிருந்த வாண்டர்சே மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபோது பண்டாரா ஸ்ட்ரெச்சர் மூலம் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் காயமடைந்த இருவருக்கும் பதிலாக தனஞ்சய டி சில்வா மற்றும் துனித் வெல்லலகே ஆகியோர் சப்ஸ்டிடியூட்டாக உள்ளே வந்தனர். இலங்கை அணியின் வாண்டர்சே மற்றும் பண்டாரா காயமடைந்ததால் சிறிது நேரம் போட்டி தடைபட்ட நிலையில், அதன் பிறகு துவங்கியது.

 

Also Read | "ரெக்கார்ட் உருவாக்குறது தான் எங்க வேலையே".. ஒரு நாள் போட்டியில் முதல் முறை.. வரலாற்றை மாற்றி எழுதி சாதனை படைத்த இந்திய அணி!!

CRICKET, JEFFREY VANDERSAY, ASHEN BANDARA

மற்ற செய்திகள்