ரோஹித்துக்கு கொரோனா தொற்று… அப்போ கேப்டன்?... 35 ஆண்டுகாலத்துக்குப் பிறகு நடக்கப்போகும் சம்பவம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணிக்கு இங்கிலனதுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பூம்ரா செயல்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ரோஹித்துக்கு கொரோனா தொற்று… அப்போ கேப்டன்?... 35 ஆண்டுகாலத்துக்குப் பிறகு நடக்கப்போகும் சம்பவம்

இந்திய அணியில் கொரோனா தொற்று

தற்போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடத்திய சோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பூம்ரா கேப்டனா

கடைசி டெஸ்ட்டுக்கு முன்பாக இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒருவேளை ரோஹித் ஷர்மா விளையாடவில்லை என்றால் இந்திய அணியை துணைக் கேப்டனான ஜஸ்ப்ரீத் பூம்ரா வழிநடத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Jasrit bumrah may lead india against England test

35 ஆண்டுகளுக்குப் பிறகு

அப்படி பூம்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டால், கபில்தேவுக்குப் பின்னர் 35 ஆண்டுகள் கழித்து இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக வழிநடத்துவார். இந்திய அணிக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்த கபில்தேவ் கடைசியாக 1987 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். அதன் பிறகு இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு குறித்து சமீபத்தில் பேசிய பூம்ரா “அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை பெருமையாக ஏற்று செயல்படுவேன்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jasrit bumrah may lead india against England test

கோலி & அஸ்வின்

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் தொற்று ஏற்பட்டு அவர் குணமானதாக செய்திகள் வெளியாகின. கோலி, தனது மனைவி அனுஷ்கா மற்றும் மகள் வாமிகாவுடன் மாலத்தீவு சுற்றுலாவுக்கு பின் இந்தியா திரும்பிய பிறகு, லேசான அறிகுறிகளுடன், கோவிட்-19 தொற்று விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் தொற்று லண்டனை அடைந்த பிறகு பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் அவர் இந்த தொற்றுநோயிலிருந்து மீண்டு முழுமையான உடற்தகுதியுடன் விளையாட தயாராக உள்ளார் என சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதுபோலவே அவர் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடினார். முன்னதாக இந்த சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், இந்த சுற்றுப்பயணத்திற்கு செல்வதற்கு முன்பு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அஸ்வின் இங்கிலாந்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து வீரர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்படுவது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

ROHIT SHARMA, BUMRAH, KAPIDEV, INDIA TEAM

மற்ற செய்திகள்