‘பௌலிங் ஸ்டைல்தான்’.. ‘பும்ராவின் பிரச்சனைக்குக் காரணமா..?’ ‘பிரபல வீரர் விளக்கம்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசும் முறை அவரது முதுகு வலிக்குக் காரணமல்ல என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

‘பௌலிங் ஸ்டைல்தான்’.. ‘பும்ராவின் பிரச்சனைக்குக் காரணமா..?’ ‘பிரபல வீரர் விளக்கம்’..

தன் நேர்த்தியான பந்து வீச்சால் பேட்ஸ்மென்களைத் திணறடித்து வரும் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் முக்கியத்துவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பாக பந்து வீசி அசத்திய பும்ரா அதன்பின் முதுகுவலி காரணமாக தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் தொடர்களில் இடம்பெறவில்லை. மேலும் அவர் 2 மாதங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, “பும்ராவின் முதுகு வலிக்கும் அவருடைய பந்து வீசும் முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் தனது பந்து வீசும் முறையை மாற்றிக் கொள்ளவும் கூடாது. அவர் திரும்பி வந்ததும் பழையபடியே பந்து வீசுவார். அவருடைய முதுகு வலி சரியாக 2 மாதங்கள் ஆகலாம். மேலும் சில மாதங்கள் கூட ஆகலாம்” எனக் கூறியுள்ளார்.

TEAMINDIA, JASPRITBUMRAH, FRACTURE, BOWLING, STYLE, ASHISHNEHRA