கல்யாண போட்டோ போட்டது ஒரு குத்தமா?.. திடீரென பும்ரா மீது கொந்தளித்த நெட்டிசன்கள்!.. ஏன் இந்த ரணகளம்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

திருமண புகைப்படத்தை வெளியிட்டது ஒரு குத்தமா என கேட்கும் அளவிற்கு கிரிக்கெட் வீரர் பும்ராவை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கல்யாண போட்டோ போட்டது ஒரு குத்தமா?.. திடீரென பும்ரா மீது கொந்தளித்த நெட்டிசன்கள்!.. ஏன் இந்த ரணகளம்?

இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா சமீபத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை கோவாவில் மணம் முடித்தார். அவர்களின் திருமண புகைப்படங்களும் வெளியானது. இந்நிலையில், பும்ராவின் திருமண புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், பும்ராவிடம் சரமாரியாக கேள்விக்கேட்டு அவரை தொந்தரவு செய்து வருகின்றனர்.  

இங்கிலாந்துடனான டி20 தொடரில் இருந்து விலகிய ஜஸ்பிரித் பும்ரா, திடீரென தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி தொலைக்காட்சி தொகுப்பாளரான சஞ்சனா கணேசனை கடந்த 14ம் தேதி கரம் பிடித்தார். இவர்களின் திருமணத்தில் வெறும் 20 நபர்களே கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் செல்போன்களும் தடை செய்யப்பட்டன.

இதனால், இணையம் வாயிலாக பலரும் பும்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.  இந்நிலையில், திருமணத்திற்கு வாழ்த்துக்கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து பும்ரா தனது திருமண புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டார்.

அதில், கடந்த சில தினங்கள் ஒரு மாயை போன்று இருந்தது. அன்புடன் வாழ்த்து கூறிய உங்கள் அனைவருக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். அவர் வெளியிட்ட அந்த புகைப்படத்தில் தம்பதி நடந்து வருகின்றனர், அருகில் பலர் நின்றுக்கொண்டு பட்டாசை கையில் ஏந்தி நிற்கின்றனர். இந்த ஒரு விஷயத்தால் தான் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். 

கடந்த 2017ம் ஆண்டு தீபாவளியன்று பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டார். அதில் தீபாவளி வாழ்த்துடன் சேர்த்து பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும் எனக்கூறி #saynotocrackers என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தான் கூறியதை தானே பின்பற்றாமல் திருமணத்தன்று பட்டாசை பயன்படுத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த நெட்டிசன்கள் இரு புகைப்படங்களையும் பகிர்ந்து தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாது, ஆனால் திருமணத்திற்கு மட்டும் வெடிக்கலமா எனக்கூறி பும்ராவை கிண்டல் செய்து வருகின்றனர். 

பும்ராவுக்கு தற்போது தான் திருமணம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இந்த பட்டாசு சர்ச்சை அவருக்கு பெரிய தலைவலியாக வந்து நிற்கிறது. ஏனென்றால் இது ரசிகர்களையும் தாண்டி சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் வரை சென்றுள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள கர்நாடக மாநிலத்தின் சிக்மகலூரு எம்.பி சோபா கரண்டலஜே, எதையும் கூறுவதற்கு முன்னால் அதை நீங்கள் முதலில் கடைபிடியுங்கள் என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்