"டி 20 மேட்ச்னா இப்டி இருக்கணும்".. ஒவ்வொரு பந்தும் ஃபயர்.. 20 ஓவர் மேட்சில் நடந்த வேற மாதிரி சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல, பாகிஸ்தானிலும் PSL என்ற சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

"டி 20 மேட்ச்னா இப்டி இருக்கணும்".. ஒவ்வொரு பந்தும் ஃபயர்.. 20 ஓவர் மேட்சில் நடந்த வேற மாதிரி சம்பவம்!!

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "1500 படம் பண்ணிருக்கேன். நான் சொல்றேன்".. வெற்றிமாறன் குறித்து இளையராஜா.. ஆர்ப்பரித்த அரங்கம்.. வீடியோ..!

இந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த வீரர்களும், வேறு நாடுகளின் வீரர்களும் சேர்ந்து கலந்து கொள்வார்கள்.

அப்படி இருக்கையில், 2023 ஆம் ஆண்டுக்கான PSL தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெஷாவர் ஷால்மி, இஸ்லாமாபாத்  யுனைட்டட் உள்ளிட்ட மொத்தம் 6 அணிகள் ஆடி வருகிறது.

Jason Roy massive century helps Quetta Gladiators win in PSL

Images are subject to © copyright to their respective owners.

பிஎஸ்எல் லீக் தொடர்

அந்த வகையில், சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஒன்றின் முடிவு குறித்து தான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் வியந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் பெஷாவர் சல்மி மற்றும் குயிட்டா கிளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது. இதில் பெஷாவர் சல்மி அணியை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் வழிநடத்தி வருகிறார்.

Jason Roy massive century helps Quetta Gladiators win in PSL

Images are subject to © copyright to their respective owners.

இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பெஷாவர் அணி, ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடி ரன் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சயிம் அயூப் 74 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 115 ரன்களும் எடுக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் குவித்து இருந்தது.

ஜேசன் ராய் ருத்ரதாண்டவம்

இதனைத் தொடர்ந்து கடின இலக்கை நோக்கி பேட்டிங்கைத் தொடங்கிய குயிட்டா கிளேடியேட்டர்ஸ் அணியும் ஆரம்பத்திலிருந்து பெஷாவர் அணியை போல அதிரடியாக ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டது. அதிலும் குறிப்பாக தொடக்க வீரர் ஜேசன் ராய், சிக்ஸர் பவுண்டரிகள் என பறக்க விட, 63 பந்துகளில் 145 ரன்கள் (20 ஃபோர்கள், 5 சிக்ஸர்கள்) எடுத்து அசத்தி இருந்தார்.

Jason Roy massive century helps Quetta Gladiators win in PSL

Images are subject to © copyright to their respective owners.

அது மட்டுமில்லாமல், 10 பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கையும் கிளாடியேட்டர்ஸ் அணி எட்டிப் பிடித்தது. கடின இலக்காக இருந்த போதிலும் அதனை ஜேசன் ராய் சதத்தின் உதவியுடன் கிளாடியேட்டர் அணி எட்டிப் பிடித்துள்ள விஷயம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.

Jason Roy massive century helps Quetta Gladiators win in PSL

Images are subject to © copyright to their respective owners.

அதே போல, டி 20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற பெருமையையும் குயிட்டா கிளேடியேட்டர்ஸ் அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட்.. மைதானத்தில் இருநாட்டு பிரதமர்கள்.. வைரலாகும் வீடியோ..!

CRICKET, JASON ROY, QUETTA GLADIATORS, PSL

மற்ற செய்திகள்