VIDEO: 'பல்ல கடிச்சுட்டு பந்து வீசியிருக்காரு!.. அப்போ அவர் முகமே மாறிடுச்சு'!.. ஆண்டர்சன் பந்து வீசும் போது... ரசிகர்களை உறையவைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டியில், பவுலர் ஆண்டர்சன் செய்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் (11), ராகுல் (17) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களமிறங்கிய புஜாரா (4), ஜடேஜா (10) ஆகிய இருவரும் சொதப்பினர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த கேப்டன் கோலி, 50 ரன்னில் அவுட்டாக, அவரைத்தொடர்ந்து ரஹானே 14 ரன்னிலும் ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால், பின்வரிசையில் இறங்கிய ஷர்துல் தாகூர், அடித்து ஆடி 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் 36 பந்தில் 57 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, அதன்பிறகு டெயிலெண்டர்கள் அடுத்தடுத்து அவுட்டானதால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு சுருண்டது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் அருமையாக பந்துவீசிய ஆண்டர்சன், லண்டன் ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட்டிலும் புஜாராவின் விக்கெட்டை அவர் தான் வீழ்த்தினார். இதற்கிடையே, இந்த போட்டியில் ஆண்டர்சன் அவரது 3வது ஸ்பெல்லை வீசும்போது, அவரது பேண்ட்டில் ரத்தம் இருந்தது கேமராவில் பதிவானது. ஃபீல்டிங் செய்யும்போது ஏற்பட்ட காயத்தால் அவரது காலில் ரத்தம் வழிந்திருக்கிறது. எனினும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரத்தம் சொட்டச்சொட்ட ஆண்டர்சன் பந்துவீசிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அவரது அர்ப்பணிப்பை பார்த்து வியக்கவைத்துள்ளது.
இங்கிலாந்து அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலரான 39 வயது ஜேம்ஸ் ஆண்டர்சன் அருமையாக பந்துவீசி, இந்த வயதிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றுகிறார். 39 வயது வரை ஒரு ஃபாஸ்ட் பவுலர் ஆடுவது என்பதே அரிதானது. அதிலும் சிறப்பாக ஆடி இன்னும் மேட்ச் வின்னராக திகழ்கிறார் ஆண்டர்சன்.
#ENGvIND pic.twitter.com/Hogx2XM6R7
— The sports 360 (@Thesports3601) September 2, 2021
மற்ற செய்திகள்