ஆமா.. இப்போ என்ன நடந்துச்சு?.. ஆண்டர்சனின் பந்தில் சிதறிய ஸ்டம்ப்.. திகைச்சு போய் நின்ன ரிஸ்வான்.. தெறி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் க்ளீன் போல்டான முகமது ரிஸ்வான் அதிர்ச்சியுடன் நிற்கும் வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 657 ரன்களும், பாகிஸ்தான் 579 ரன்களும் குவித்தன. அடுத்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் அதிரடி காட்டிய இங்கிலாந்து 35.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்களுடன் 'டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 343 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 96.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகளை கொண்ட தொடரில் இங்கிலாந்து 1 - 0 என முன்னிலை பெற்றிருக்கிறது.
இதனிடையே, முல்தானில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்கள் எடுத்து. இதனையடுத்து ஆடிய பாகிஸ்தான் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இறங்கிய இங்கிலாந்து, 275 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்த இன்னிங்சில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானின் விக்கெட்டை தூக்கினார் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஆண்டர்சன் வீசிய பந்தை தடுமாறி டிரைவ் ஆட முயன்றார் ரிஸ்வான். ஆனால், பந்து ஆஃப் ஸ்டம்பை சிதறடித்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ரிஸ்வான் அவுட் ஆன பிறகும் அப்படியே நின்றிருந்தார். வர்ணனையாளர்களும் ஆண்டர்சனின் அந்த பந்தை சிலாகித்து பேசினர். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
What a ball from Anderson pic.twitter.com/xXaBxeLpAC
— Prashant Tripathi (@SahilTripathi03) December 11, 2022
மற்ற செய்திகள்