சிவனும் சக்தியும் சேர்ந்தா.. தீவிர பயிற்சியில் ஜடேஜா - தோனி.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை அணி நிர்வாகம் பகிர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

சிவனும் சக்தியும் சேர்ந்தா.. தீவிர பயிற்சியில் ஜடேஜா - தோனி.. வைரலாகும் வீடியோ..!

                                Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இத இந்திய டீம் மறக்கவே கூடாது".. கோப்பையை பறிகொடுத்த இந்தியா.. கடுகடுத்த கவாஸ்கர்..!

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ள நிலையில் இதற்கான பயிற்சியிலும் அணிகள் இறங்கியுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

ஸ்டார்

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். மற்ற அணிகளுக்கு கேப்டன்கள் ஒருபுறம் மாறிக்கொண்டே இருக்கையில் தோனி இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் தல தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ கூட்டணி எப்போதும் ஸ்பெஷல் தான். பல தாதாவான அணிகளையே ரவுண்டு கட்டி வெற்றியை தங்களது வசமாக்கிய டீம் அது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜடேஜா கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பதவியை தோனியிடமே ஒப்படைத்தார் ஜடேஜா.

Images are subject to © copyright to their respective owners.

வீடியோ

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியுடனான தொடர் முடிவடைந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்திருக்கிறார் ஜடேஜா. தோனியுடன் மைதானத்தில் ஜடேஜா சிரித்தபடி பேசும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | "உலக கோப்பை தான் முக்கியம்.. குடும்ப நிகழ்ச்சிகள் எல்லாம் அடுத்தது தான்".. ரோஹித்துக்கு கவாஸ்கர் கொடுத்த அட்வைஸ்..

CRICKET, JADEJA, DHONI, IPL

மற்ற செய்திகள்