கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கும் போது தோனி கிட்ட ஜடேஜா வச்ச ஒரு கோரிக்கை.. வெளியான சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேப்டன்ஷி பொறுப்பு ஒப்படைக்கும் முன் தோனியிடம் ஜடேஜா கூறிய விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் 26-ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதனை அடுத்து புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த சூழலில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை அணி, ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராகவும், இரண்டாவது போட்டியில் லக்னோ அணிக்கு எதிராகவும், மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராகவும் வரிசையாக ஹாட்ரிக் தோல்வி அடைந்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணி பின்தங்கி மோசமான நிலையை அடைந்துள்ளது.
இந்த நிலையில் கேப்டன்ஷி பொறுப்பு ஒப்படைக்கும் முன்பு தோனியிடம் வைத்த வேண்டுகோள் குறித்து ஜடேஜா பகிர்ந்துள்ளார். அதில், ‘உங்களது ஆலோசனை களத்தில் நிச்சயம் எனக்கு தேவை. இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் தான் கேப்டன்சி செய்யவேண்டும். பரபரப்பு இல்லாத நேரத்தில் நான் கேப்டன் பொறுப்பை முழுமையாக பார்த்துக் கொள்கிறேன். உங்களிடமிருந்து கேப்டன்சியை இன்னும் நன்றாக கற்றுக்கொண்டு இரண்டாவது பாதியில் நான் தனியாக கேப்டன்சி செய்ய விரும்புகிறேன். அதுவரை எனக்கு உதவுங்கள். அப்போதுதான் என்னுடைய அழுத்தம் குறையும். டீமுக்கும் அதுதான் நல்லது’ எனக் கூறியாதாக ஜடேஜா கூறியுள்ளார்.
அதனால் போட்டியின் கடைசி கட்டத்தில், பீல்டிங் ஷெட் செய்வது, பவுலர்களுக்கு ஓவர் கொடுப்பது போன்ற முடிவுகளை தோனி எடுத்து வருகிறார். முன்னாள் வீரர்கள் பலரும், பேப்பரில் ஜடேஜா கேப்டனாக இருப்பதாகவும், ஆனால் களத்தில் தோனி தான் கேப்டபாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். தற்போது இந்த விமர்சனங்களுக்கு ஜடேஜா பதில் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்