பழைய பன்னீர் செல்வமா வந்துட்டாரு.. 2 மாசம் கேப்புக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பிய ‘ஸ்டார்’ ப்ளேயர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாயம் குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கும் ஜடேஜா தனது உடல்தகுதி குறித்து பேட்டியளித்துள்ளார்.
காயம் காரணமாக ஓய்வில் இருந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக ஜடேஜா வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின் போது ஜடேஜாவுக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டது. அதனால் காயத்துக்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக அடுத்த நடந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸிக்கு எதிரான இரண்டு கிரிக்கெட் தொடர்களையும் தவறவிட்டார்.
இந்த நிலையில் மீண்டும் அணிக்கு திரும்பியது குறித்து ஜடேஜா பேட்டியளித்துள்ளார். அதில், ‘நான் இப்போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவுக்காக விளையாட இருக்கிறேன். மீண்டும் களத்தில் விளையாட ஆர்வமாக இருந்தேன். என்சிஏ-வில் எனது உடற்தகுதிக்காக 2 மாதங்கள் கடுமையாக உழைத்து வருகிறேன். இலங்கை தொடருக்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். பெங்களூருவில் பந்துவீச்சு, பேட்டிங் பயிற்சி செய்து வருகிறேன். அதனால் டச்சில்தான் இருக்கிறேன்’ என ஜடேஜா கூறியுள்ளார். இதமூலம் ப்ளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் என்பதை சூசகமாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை (24.02.2022) லக்னோ மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடையில்லாத உடலின் மேல் வைக்கப்படும் உணவு.. ஏடாகூடமாக யோசித்த ஹோட்டல்..!
மற்ற செய்திகள்