‘எனக்கு ஒரு L size டி-சர்ட்’!.. ‘தல’ வீடியோவுக்கு கீழே வந்த ‘சர்ப்ரைஸ்’ கமெண்ட்.. இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ‘தல தரிசனம்’ வீடியோவுக்கு கீழே சிஎஸ்கே வீரர் ஒருவர் கமெண்ட் செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
14-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்றது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு ஆமீரகத்தில் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் தொடர் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் 50 சதவீத பார்வையாளர்களுடன் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.
இதற்காக கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். சென்னை அணியின் முதல் போட்டி மும்பையில் நடைபெற உள்ளதால், சிஎஸ்கே வீரர்கள் மும்பை சென்று பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில் முதல்முறையாக சில மாற்றங்களுடன் கூடிய புதிய ஜெர்சியை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டது. இதனை அணியின் கேப்டன் தோனி அறிமுகப்படுத்தினார். அதில், இந்திய ராணுவ வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக டி-சர்டின் தோள்பட்டையில் ராணுவ உடை போன்ற டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சென்னை அணி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வீடியோவுக்கு கீழே சிஎஸ்கே வீரர் ஜடேஜா ‘எனக்கு ஒரு L size டி-சர்ட்’ என பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜடேஜா ஓய்வில் இருந்தார். இதனால் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. மேலும் ஐபிஎல் தொடரிலும் ஜடேஜா விளையாடுவாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
Sir Jadeja is Coming Soon..🦁🔥#WhistlePodu | @ChennaiIPL pic.twitter.com/7fE9UTDDwR
— CSK Fans Army™ (@CSKFansArmy) March 24, 2021
இந்த நிலையல் திடீரென சிஎஸ்கே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜடேஜா பதிவிட்ட கமெண்ட்டால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் சிஎஸ்கே வீரர்களுடன் விரைவில் ஜடேஜா பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்