VIDEO: அம்பயர் எடுத்த முடிவு.. ‘ஷாக்’ ஆன படிக்கல்.. ஆனா ஜடேஜா ‘ஹேப்பி’ அண்ணாச்சி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூருக்கு எதிரான போட்டியின் போது சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா, அம்பயரிடம் குறும்பாக விளையாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

VIDEO: அம்பயர் எடுத்த முடிவு.. ‘ஷாக்’ ஆன படிக்கல்.. ஆனா ஜடேஜா ‘ஹேப்பி’ அண்ணாச்சி..!

ஐபிஎல் (IPL) தொடரின் 35-வது லீக் போட்டி இன்று (24.09.2021) ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (CSK), விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Jadeja pats Umpire’s back appreciating his decision to not give wide

அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த கூட்டணி 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. அப்போது பிராவோ வீசிய 14-வது ஓவரில் விராட் கோலி (53 ரன்கள்) அவுட்டாகினார்.

Jadeja pats Umpire’s back appreciating his decision to not give wide

இதனை அடுத்து களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் 12 ரன்களில் அவுட்டாக, அடுத்ததாக தேவ்தத் படிக்கலும் (70 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து அந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது. சென்னை அணியைப் பொறுத்தவரை பிராவோ 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும், தீபக் சஹார் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Jadeja pats Umpire’s back appreciating his decision to not give wide

இந்த நிலையில் இப்போட்டியில் 11-வது ஓவரை ஜடேஜா (Jadeja) வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை தேவ்தத் படிக்கல் எதிர்கொண்டார். அப்போது ஜடேஜா வொய்ட் (Wide) லைனை தாண்டி வீச, அம்பயர் அதற்கு வொய்ட் கொடுக்கவில்லை.

அதற்கு காரணம், தேவ்தத் படிக்கல் ஆஃப் ஸ்டம்ப்பை தாண்டி விளையாடினார். அதனால் விதிகளின்படி அதற்கு அம்பயர் வொய்ட் கொடுக்கவில்லை. உடனே ஜடேஜா, அம்பயரின் முதுகில் குறும்பாக தட்டி பாராட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மற்ற செய்திகள்