"இதுனால தான் என்ன எல்லாரும் 'பெஸ்ட்'ன்னு சொல்றாங்க!!.." 'பஞ்சாப்' அணிக்கு 'ஜடேஜா' வைத்த 'செக்'.. ஆடிப் போன 'ராகுல்' அண்ட் 'கோ'.. 'வைரல்' சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், டெல்லி அணிக்கு எதிராக தோல்வியுடன் தொடங்கியிருந்தது.

"இதுனால தான் என்ன எல்லாரும் 'பெஸ்ட்'ன்னு சொல்றாங்க!!.." 'பஞ்சாப்' அணிக்கு 'ஜடேஜா' வைத்த 'செக்'.. ஆடிப் போன 'ராகுல்' அண்ட் 'கோ'.. 'வைரல்' சம்பவம்!!

அந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 188 ரன்கள் அடித்திருந்த போதும், பந்து வீச்சில் சொதப்பியதால், தோல்வியை தழுவியிருந்தது. இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் போட்டியில், சென்னை அணி மிகச் சிறப்பாக பந்து வீசி அசத்தியது. பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக தீபக் சாஹர், 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மற்ற பந்து வீச்சாளர்களும் மிக கச்சிதமாக அதிக ரன்களை வழங்காமல் கட்டுக் கோப்பாக பந்து வீசினர். தொடர்ந்து, எளிதான இலக்கை நோக்கி சிஎஸ்கே ஆடி வரும் நிலையில், இந்த போட்டியில், பஞ்சாப் அணி இழந்த 2 விக்கெட்டுகள், போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது.

பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் (Chris Gayle), சாஹர் வீசிய மூன்றாவது ஓவரின் போது, பந்தை தட்டி விட்டு, ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது, மறுமுனையில் நின்ற பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் (KL Rahul), பேட்ஸ்மேன் திசை நோக்கி வேகமாக ஓடினார். பஞ்சாப் அணி ஒரு ரன் எடுத்து விடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், மின்னல் வேகத்தில் ஒடி வந்த ஜடேஜா (Jadjea), பந்தை அற்புதமாக பிடித்து, மறுநொடியே ஸ்டம்பை நோக்கி வேகமாக வீசினார்.

 

பந்தும் சரியாக ஸ்டம்பில் பட, நூலிழையில் ராகுல் அவுட்டானார். அதே போல, கெயில் விக்கெட் எடுத்து நடையைக் கட்டவும் ஜடேஜா தான் காரணமாக இருந்தார். கவர் டிரைவ் பகுதியை நோக்கி, கெயில் அடித்த பந்தை, அப்பகுதியில் ஃபீல்டிங் நின்ற ஜடேஜா, மிக அற்புதமாக தாவிச் சென்று கேட்சை எடுத்தார். இந்த கேட்சை பார்த்த பார்வையாளர்கள் ஒரு நொடி மலைத்து தான் போயினர்.

 

ராகுல் மற்றும் கெயில் ஆகியோர் களத்தில் நின்றிருந்தால், நிச்சயம் போட்டி, பஞ்சாப் அணி பக்கம் திரும்பியிருக்கும். ஆனால், ரன் அவுட் மற்றும் கேட்ச் என ஜடேஜா செய்த சிறப்பான பீல்டிங், சென்னை அணிக்கு சாதகமாக அமைந்தது.

கிரிக்கெட் உலகில் ஜடேஜா போன்ற ஒரு ஃபீல்டர் எங்குமில்லை என பல கிரிக்கெட் பிரபலங்கள் ஏற்கனவே புகழ்ந்துள்ள நிலையில், இன்று அவர் எடுத்த விக்கெட்டுகளும், அதற்கு சான்றாக அமைந்தது.

 

இதனையடுத்து, இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்