நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்.. ஜடேஜாவின் மேஜிக் ஸ்பின்.. திகைச்சு நின்ன பேட்ஸ்மேன்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணி வீரர் டோட் மர்பியின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்திய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்.. ஜடேஜாவின் மேஜிக் ஸ்பின்.. திகைச்சு நின்ன பேட்ஸ்மேன்.. வீடியோ..!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடர்களில் ஆட உள்ளது. அதன்படி, தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

Jadeja Magic spin that dismiss Todd Murphy Video goes viral

இரண்டாவது டெஸ்ட் போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து ஆரம்பமானது. இதன் முதல் நாள் முடிவில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81 ரன்களும், பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி நான்கு விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடி இருந்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒன்பது ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நாளே மிகவும் விறுவிறுப்பாக சென்றுள்ளதால் இனி வரும் நாட்களும் அதே போல இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Jadeja Magic spin that dismiss Todd Murphy Video goes viral

இதனிடையே, ஆஸி. வீரர் டோட் மர்பியின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்திய விதம் ரசிகர்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 68 வது ஓவரை ஜடேஜா வீச அதனை மர்பி எதிர்கொண்டார். ஓவரின் 5 வது பந்தில் மர்பி டிரைவ் ஆட நினைத்து பேட்டை சுழற்ற, பந்து திசைதிரும்பி ஸ்டம்பை சாய்த்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மர்பி, ஜடேஜாவை சில வினாடிகள் திகைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து நடையை கட்டினார் . இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

 

CRICKET, INDIA, JADEJA

மற்ற செய்திகள்