Vilangu Others

இலங்கை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு? .. இந்திய அணியில் ஜடேஜா உள்ளே.. அடுத்த பாஸ்ட் பவுலரும் ரெடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ராவும் இணைகின்றனர்.

இலங்கை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு? .. இந்திய அணியில் ஜடேஜா உள்ளே.. அடுத்த பாஸ்ட் பவுலரும் ரெடி!

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 4வது டி20 போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 4-0 என டி20 தொடரை வென்றது. கடைசி போட்டி வரும் 20ம் தேதி நடக்கிறது. மேலும், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் ஆடிவரும் நிலையில், இன்று 2வது டி20 போட்டியும், வரும் 20ம் தேதி 3வது மற்றும் கடைசி டி20 போட்டியும் நடக்கிறது. அதன்பின்னர் இலங்கை அணி இந்தியாவிற்கு வந்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

இலங்கை தொடரில் ஜடேஜா

வரும் 24ம் தேதி முதல் டி20 போட்டி லக்னோவிலும், அதன்பின்னர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் கடைசி 2 டி20 போட்டிகளும் நடக்கின்றன. மார்ச் 4ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியிலும், மார்ச் 12ம் தேதி 2வது டெஸ்ட் பெங்களூருவிலும் தொடங்கி நடக்கும். இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ விரைவில் வெளியிட உள்ளது. அதில், விராட் கோலிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ரவீந்தர் ஜடேஜா இலங்கை தொடரில் விளையாடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோவில் பயற்சி

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடைந்த காயம் காரணமாக, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர்களில்

ரவீந்திர ஜடேஜாவால் ஆட முடியவில்லை. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில்(என்.சி.ஏ) மறுவாழ்வு மையத்தில் பெற்று வந்த பயிற்சி மூலம் முழு ஃபிட்னெஸை அடைந்துவிட்டார் ஜடேஜா. எனவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவர் ஆடுகிறார். என்சிஏ-வில் முழு ஃபிட்னஸை அடைந்துவிட்டதையடுத்து, இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடுவதற்காக லக்னோவிற்கு சென்றுவிட்டார் ஜடேஜா. குவாரண்டின், கோவிட் டெஸ்ட் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருப்பதால், லக்னோவிற்கு சென்றுவிட்டார் ஜடேஜா. எனவே அவர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆடுவது உறுதியாகிவிட்டது.

கோலி 100வது டெஸ்ட்

அதேபோன்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ராவும் இலங்கைக்கு எதிராக ஆடுகிறார். அதற்காக அவரும் லக்னோவிற்கு சென்றுவிட்டார். ஜடேஜா, பும்ரா ஆகியோர் கம்பேக் கொடுக்கும் அதேவேளையில், விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படவுள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படவுள்ளது. மொஹாலியில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி கோலிக்கு 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி. ஒருவேளை அந்த போட்டியிலும் அவர் ஓய்வு எடுத்தால், பெங்களூருவில் கோலி அவரது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியை ஆடுவார்.

விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டதால், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா டெஸ்ட் அணியின் கேப்டன்சியையும் அவரே ஏற்பார் எனலாம்.

IND VS SRILANKA, VIRAT KHOLI, JADEJA, JASPRIT BUMRAH, T20 MATCH, KHOLI 100 TEST, BCCI

மற்ற செய்திகள்