‘இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்’.. விண்ணப்பித்துள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் கோச்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ஜே. அருண்குமார் விண்ணப்பித்துள்ளார்.

‘இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்’.. விண்ணப்பித்துள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் கோச்..!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் மற்றும் பௌலிங்க் பயிற்சியாளராக பாரத் அருண் ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்களது பதிவிக்காலம் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதனை அடுத்து நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்காக இவர்களது பதவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதற்கான விண்ணப்பங்களை வரும் 30 -ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்ற அறிவிப்பை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில் பேட்டிங் பயிற்சியாளர் பதிவிக்கு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் ஜெ. அருண்குமார் என்பவர் விண்ணப்பத்துள்ளார். இவர் கர்நாடகா மற்றும் ஹைதராபாத் ரஞ்சிக்கோப்பை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BCCI, TEAMINDIA, J ARUNKUMAR, BATTING, COACH