"அவரு ஆடியிருந்தா நல்லா இருந்துருக்கும்.. ஆனா, நான் என்னங்க பண்றது??.." விமர்சனத்தை ஏற்படுத்திய வார்னரின் 'கருத்து'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டேவிட் வார்னர் (David Warner) தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், தோல்வியை தழுவியிருந்தது.

"அவரு ஆடியிருந்தா நல்லா இருந்துருக்கும்.. ஆனா, நான் என்னங்க பண்றது??.." விமர்சனத்தை ஏற்படுத்திய வார்னரின் 'கருத்து'!!

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 159 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணியில், தொடக்க வீரர் பேர்ஸ்டோ, அதிரடியாக ஆடி ரன்கள் குவித்து அவுட்டானார். அதன் பிறகு, வில்லியம்சன் மட்டும் ஒரு பக்கம் நிலைத்து நிற்க, மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தது. வில்லியம்சன் களத்தில் இருந்ததால், போட்டி டிரா ஆனது. ஆனால், அதன் பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில், டெல்லி அணி வெற்றி பெற்றது.

இதுவரை 5 போட்டிகள் ஆடியுள்ள ஹைதராபாத் அணி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது, அந்த அணியின் மிடில் ஆர்டர் தான். பல வீரர்களை மாற்றிப் பார்த்த பிறகும், ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் கடுமையான தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது.

முதலில் சில போட்டிகளில், களமிறங்கிய மனிஷ் பாண்டே (Manish Pandey), ரன்கள் குவித்தாலும் அதிரடியாக ஆடவில்லை. இதனால், முதல் இரண்டு போட்டிகளுக்கு பிறகு அவர் களமிறங்கவில்லை. ஒரு வேளை, மனிஷ் பாண்டே இருந்தால் கூட, டெல்லி அணிக்கு எதிரான போட்டி, ஹைதராபாத் பக்கம் திரும்பியிருக்கலாம்.

இந்நிலையில், போட்டிக்கு பிறகு, இது பற்றி பேசிய வார்னர், 'இந்த போட்டி, சற்று கடினமான ஒன்று தான். எங்களது பந்து வீச்சாளர்கள், பவர் பிளே ஓவர்களுக்கு சிறப்பாக பந்து வீசினர். பேட்டிங்கில் பேர்ஸ்டோ சிறப்பாக செயல்பட்டார். அதே போல, வில்லியம்சனும் இறுதி கட்டத்தில் சிறப்பாக ஆடினார்.

மிடில் ஓவர்களில் எங்களால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை. மனிஷ் பாண்டே அணியில் இடம்பெறாமல் போனதற்கு, அணியின் தேர்வாளர்கள் தான் முக்கிய காரணம். இது அவர்கள் எடுத்த கடுமையான முடிவாகவே நான் பார்க்கிறேன். மனிஷ் பாண்டேவிற்கு பதிலாக விராட் சிங் ஆட வேண்டுமென்பது அவர்களின் விருப்பம் தான். இதனால், விராட் சிங்கை நான் குறை கூறவில்லை. ஆனால், இந்த ஆடுகளம் சற்று வித்தியாசமானது.

it was a harsh call to drop manish pandey by selector says warner

டெல்லி அணி மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி, எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்' என வார்னர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். ஹைதராபாத் அணி, தங்களது அடுத்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நாளை மறுநாள் (ஏப்ரல் 28) எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்