‘காயத்தில் இருந்து சீனியர் நட்சத்திர வீரர்’... சீக்கிரமே தேறிடுவாரு’... ‘பிசிசிஐ-க்கு நம்பிக்கை அளித்த தகவல்’... ‘ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க வாய்ப்பு’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாத முன்னணி வீரரான இஷாந்த் சர்மா, விரைவில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

‘காயத்தில் இருந்து சீனியர் நட்சத்திர வீரர்’... சீக்கிரமே தேறிடுவாரு’... ‘பிசிசிஐ-க்கு நம்பிக்கை அளித்த தகவல்’... ‘ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க வாய்ப்பு’...!!!

ஆஸ்திரேலியாவில் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய அணி, 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்தத் தொடரில், பங்கேற்க இருந்த முன்னணி வீரரான இஷாந்த் சர்மா, ஐபில் போட்டியின்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடியபோது காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடிய அவர், காயம் காரணமாக 13-வது சீசனிலிருந்து விலகி இந்தியா திரும்பினார்.

Ishant Sharma Sweating It Out At NCA To Get Fit For Australia Tests

பின்னர் இஷாந்த் சர்மா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளதுடன், பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய அணியில் முதலில் விளையாடப்படும் பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு கேப்டன் விராட் கோலி நாடு திரும்பவுள்ளார். இதனால், இந்திய அணியின் பௌலிங் ஆர்டரை பலப்படுத்தும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.

அதில் முக்கியமானவராக இஷாந்த் சர்மா உள்ள நிலையில், அவர் ராகுல் டிராவிட் தலைமையில் தன்னுடைய பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் ஆஸ்திரேலியா தொடரில் இட் பெறாததால், தன்னுடைய பிட்னசை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இஷாந்த் சர்மாவிற்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அன்டர் -19 பயிற்சியாளர் பாரஸ் மாம்ப்ரேவிடம் அவர் தொடர்ந்து பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Ishant Sharma Sweating It Out At NCA To Get Fit For Australia Tests

இதனிடையே, மாம்ப்ரேவுடன் பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொள்வதன்மூலம், டெஸ்ட் போட்டிகள் துவங்குவதற்குள் இஷாந்த் பிட்னசில் வெகு சிறப்பாக தேறுவார் என்று ராகுல் டிராவிட் பிசிசிஐக்கு உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய தொடரில் அவர் பங்கு அதிகளவில் இருக்கும் என்றும் அவர் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் உடற்தகுதி தேர்வு செய்ப்பட்டு விரைவில் அவர், ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இஷாந்த் சர்மா இந்திய அணியின் சீனியர் பவுலர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னணி பவுலராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் காயம் காரணமாக சேர்க்கப்படாத ரோகித் சர்மாவும் விரைவில் குணமடைந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என நம்பப்படுகிறது.

மற்ற செய்திகள்