ருத்ராஜ் கெய்க்வாட் ஏன் இந்திய அணில விளையாட விடமாட்றீங்க? ரோகித் ஷர்மா, ராகுல் டிராவிட், இஷான் கிசனை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா: இதுவரை இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் ருத்ராஜ் கெய்க்வாடுக்கு ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.
மோசமான தென் ஆப்ரிக்க தொடருக்கு பிறகு இந்திய அணி உள்நாட்டு சீசனுக்கு தயாராகி உள்ளது. தென் ஆப்ரிக்க பயணத்துக்கு பின் இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கும் இடையே 6 போட்டிகள் கொண்ட 20 & 50 ஓவர்கள் தொடருக்கான திருத்தப்பட்ட புதிய இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்திய சுற்றுப்பயணம் 2022 பிப்ரவரி 6 ஆம் தேதி ஒருநாள் போட்டியுடன் தொடங்கி உள்ளது. 6 போட்டிகள் கொண்ட ஒயிட்-பால் தொடர் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடர்களைக் கொண்டது.
முன்னதாக, இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருநாள் போட்டிகள் அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. மேலும், டி20 சர்வதேச போட்டிகள் முறையே கட்டாக், விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.
இருப்பினும், மைதானங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன, மேலும் அனைத்து ஒருநாள் போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், டி20 போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டனிலும் நடைபெறும் என BCCI அறிவித்தது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் முழுமையான அட்டவணை 2022:
1வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 6, ஞாயிறு, அகமதாபாத்
2வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 9, புதன், அகமதாபாத்
3வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 11, வெள்ளிக்கிழமை, அகமதாபாத்
1வது T20I, பிப்ரவரி 16, புதன்கிழமை, கொல்கத்தா
2வது T20I, பிப்ரவரி 18, வெள்ளி, கொல்கத்தா
3வது டி20, பிப்ரவரி 20, ஞாயிறு, கொல்கத்தா
முன்னதாக, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக் கொண்ட ஒரு நாள் தொடரை, இந்திய கிரிக்கெட் அணி, 3 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியிருந்தது. தொடர்ந்து, முதல் இரண்டு டி 20 போட்டியிலும், இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது
இந்த தொடர்களில் ருத்ராஜூக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றொரு முறை சேர்க்கப்படாததைக் கண்டு ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர், பலர் ரோகித் ஷர்மா, ராகுல் டிராவிட், இஷான் கிஷன் மற்றும் அணி நிர்வாகத்தை ட்விட்டரில் விமர்சித்து எடுத்தனர்.
தோனி முதலில் ஸ்பார்க் இல்லைனு சொன்னார், சி எஸ் கேவில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இப்போது ரோகித் அது போல செய்கிறார் என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் கோட்டா படி ரோகித் தொடர்ந்து இஷான் கிசனுக்கு வாய்ப்பளிப்பதாக ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
ருத்ராஜ் ஆடினால் தவான், ரோகித், இஷான், ராகுல் எல்லாம் காணாமல் போவார்கள் என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
ஆரஞ்ச் கேப் வாங்கியும் ருத்ராஜூக்கு ஆட வாய்ப்பளிக்காதது குறித்து ராகுல் டிராவிட்டையும் ஒரு ரசிகர் விமர்சித்துள்ளார்.
15 கோடிக்கு ஏலம் போகாமலே தக்கவைக்கப்பட்ட வீரரை இப்படி நடத்துவது சரியில்லை என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
அடுத்த போட்டியில் ருத்ராஜ் ஆட வேண்டும் என ஒரு ரசிகர் கூறியுள்ளார்
ரோஹித்'த அவ்ளோ சாதாரணமா நெனச்சுட்டடீங்களா பொல்லார்ட்?.. கேப்டனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 'கோலி'
மற்ற செய்திகள்